சோழவரம் அருகே சோலிப்பாளையத்தில் புதிய மின்மாற்றியை திறந்த எம்எல்ஏ

சோலிப்பாளையத்தில் புதிய டிரான்ஸ்பார்மரை சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் மக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.;

Update: 2024-10-18 09:15 GMT

புதிய மின்மாற்றியை  ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம்.

சோழவரம் அருகே சோலிப்பாளையத்தில் புதிய டிரான்ஸ்பார்மரை சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் மக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியம் சோழவரம் ஊராட்சிக்கு உட்பட்ட சோலிப்பாளையத்தில் சுமார் 2000.க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குறைந்த மின்னழுத்தம் காரணத்தினால் வீடு உபயோகப் பொருட்களும் சரிவர இயங்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சீரான மின்சாரம் வழங்க புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரிக்கை வைத்ததையடுத்து புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அதன் துவக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சோழவரம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவரும் சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளருமான மீ.வே.கர்ணாகரன் தலைமை வகித்தார். மின்வாரிய செயற்பொறியாளர் சௌந்தரராஜன்,உதவி செயற்பொறியாளர் விஜயகுமார்,உதவி பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சுதர்சனம் கலந்துகொண்டு மக்கள் பயன்பாட்டிற்காக புதிய டிரான்ஸ்பார்மரை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.இதில் அரசு அதிகாரிகள், கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள், கிராமபொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News