சென்னை கோயம்பேடு கழிவு நீர் தொட்டியில் குதித்து சிறுவன் தற்கொலை

சென்னை கோயம்பேட்டில் தாய் கண்டித்ததால் 16 வயது சிறுவன் கழிவு நீர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான்.

Update: 2024-10-07 08:00 GMT

படம்.

கோயம்பேட்டில் கழிவு நீர் தொட்டியில் குதித்து 16 வயது சிறுவன் உயிர் இழந்தான். நண்பர்களுடன் சுற்றிக்கொண்டு இரவு வீட்டிற்கு வராத சிறுவனை தாய் கண்டித்ததால் இந்த  விபரீதம் நடந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சின்மையா நகர் மணவாளன் சாலை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மதன்குமார்-சிலம்பரசி. இவர்களது மகன் வசந்தகுமார் (வயது16) இவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்து நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது போன்ற மழக்கங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த சென்று விட்டு வீட்டிற்கு வராமல் இன்று காலை வீட்டிற்கு வந்துள்ளார்

இதனை அவரது தாய் கேட்டு கண்டித்ததாக கூறப்படுகிறது இதனையடுத்து வசந்தகுமார் தனது நண்பர் ஒருவருக்கு செல்போன் மூலம் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு சென்று கோயம்பேடு குலசேகரபுரத்தில் உள்ள கழிவுநீர் ஊந்து நிலைய கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவன் இறந்து கிடப்பது கண்டு கோயம்பேடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் 30 அடி ஆழமுள்ள கழிவுநீர் கிணற்றில் சடலமாக கிடந்த சிறுவனை கயிறு கட்டியும், மூச்சுக் கருவி பொருத்தியும் உள்ளே இறங்கி 4 மணி நேரம் போராடி மேலே இழுத்து சடலமாக மீட்டனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார் இறந்த நிலையில் சடலமாக கிடந்த சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தாய் கண்டித்ததால் தான் சிறுவன் கழிவு நீர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பர்களுடன் சேர்ந்து சுற்றித்திரிந்த மகனை தாய் கண்டித்ததால் கழிவு நீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News