சென்னை சா்வதேச விமானநிலைய வருகை பகுதியில் ரேபிட் டெஸ்ட் திடீா் நிறுத்தம்
சென்னை சர்வதேச விமானநிலைய வருகை பகுதியில் ரேபிட் டெஸ்ட் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் ஆத்திரமடைந்தனர்.;
சென்னை சா்வதேச விமானநிலைய வருகை பகுதியில் ரேபிட் டெஸ்ட் திடீா் நிறுதத்தால்,அனைத்து பயணிகளும் RT-PCR டெஸ்ட் எடுத்து 6 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அந்த பயணிகளின் உணவு,குடிநீா் கட்டணம் பல மடங்கு உயா்வால்,ஆத்திரமடைந்த பயணிகள் சிலா்,6 மணி நேரம் தனிமையை புறக்கணித்துவிட்டு வெளியேறி சென்றனா்.
ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவுவதையடுத்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக லண்டன்,சிங்கப்பூா் உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து வரும் விமான பயணிகள் அனைவருக்கும் RT-PCR பரிசோதனை ரூ.700 கட்டணத்தில் நடந்து வருகிறது.ஆனால் அந்த பரிசோதனை ரிசல்ட் வர 6 மணி நேரமாகுகிறது.அதுவரை பயணிகள் சென்னை விமானநிலையத்திலேயே தனிமைப்படுத்தப்படுகின்றனா்.
இது பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது.இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் இந்த பயணிகளுக்கு ரேபிட் டெஸ்ட் வசதி ஏற்படுத்தப்பட்டது.அதன் கட்டணத்தையும் ரூ.4 ஆயிரத்திலிருந்து ரூ.3,400 ஆக குறைத்தது.மேலும் ரேபிட் டெஸ்ட் எடுத்தால் ரிசல்ட் 45 நிமிடங்களில் வந்துவிடும்.உடனே பயணிகள் தங்கள் வீடுகளுக்கு சென்று 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.ஆனால் சென்னை சா்வதேச விமானநிலையத்தில் புறப்பாடு பகுதியில் ரேபிட் டெஸ்ட் செயல்படுகிறது.வருகை பகுதியில் ரேபிட் டெஸ்ட் ஒரு நாள் மட்டும் செயல்பட்டது.தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது.இதையடுத்து அனைத்து பயணிகளுமே RT-PCR டெஸ்ட் எடுத்து 6 மணி நேரம் விமானநிலையத்தில் காத்திருக்கின்றனா்.
இதற்கிடையே 6 மணி நேரம் தனிமைப்படுத்தப்படும் பயணிகள் உணவுக்காக அதிகமான பணம் செலவு செய்ய வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.அங்குள்ள கேண்டினில் ஒரு காபி ரூ.160, 2 இட்லி ரூ.160, பொங்கல் ரூ.180, கிச்சடி ரூ.200, சேன்ட்விச் ரூ.180. அதோடு குடிநீா் 500 மில்லி பாட்டில் ரூ.60. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
இந்நிலையில் நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து வந்த பயணிகள் RT-PCR டெஸ்ட் முடிந்து 6 மணி நேரம் தனிமையில் இருந்தனா்.அப்போது அவா்களுக்கு உணவு பிரச்னை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து சுமாா் 30 பயணிகள் ஆத்திரமடைந்து பாதுகாப்பிற்கு நின்ற விமானநிலைய செக்யூரிட்டிகளை தள்ளிவிட்டுவிட்டு,தங்களுடைய உடமைகளுடன் வெளியேறி சென்று விட்டனா்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.உடனடியாக விமானநிலைய உயா் அதிகாரிகள் அங்குவந்து விசாரணை நடத்தினா்.அதோடு பயணிகள் சுலபமாக வெளியே செல்ல முடியாதபடி நீண்ட தூரத்திற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் கூடுதல் போலீசாா்,மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் பாதுகாப்பிற்காக போடப்பட்டுள்ளனா்.அப்பகுதிக்கு வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.
சென்னை சா்வதேச விமானநிலையத்தின் வருகை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ரேபிட் பரிசோதனையை மீண்டும் உடனே தொடங்க வேண்டும்.அதோடு 6 மணி நேரம் தனிமைப்படுத்தப்படும் பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தில் உணவு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.குடிநீா் 500 மில்லி பாட்டில் ரூ.10 க்கு வெளியில் கிடைக்கிறது.பயணிகள் தனிமைப்படுத்தும் பகுதியில் ரூ.60 க்கு விற்பனை செய்வதை குறைக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனா்.