அந்தியூரில் புதிய யூனியன் அலுவலகத்திற்கு பூமி பூஜை
அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலத்தின் முன்னிலையில் புதிய அலுவலகத்திற்கு பூமி பூஜை;
யூனியன் அலுவலக கட்டடத்துக்கு பூமி பூஜை
அந்தியூர்: அந்தியூர் யூனியன் அலுவலக வளாகத்தில் புதிய யூனியன் அலுவலக கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் இந்த புதிய யூனியன் அலுவலகம் கட்டுவதற்காக ஐந்து கோடியே 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வெங்கடாச்சலம் கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் பேரூர் செயலர் திரு. காளிதாஸ், மாவட்ட ஐடி விங் துணை அமைப்பாளர் திரு. நாகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி. அமுதா, திரு. சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.