டெல்லியில் டிசம்பர் 19-ம் தேதி இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்

டெல்லியில் டிசம்பர் 19-ம் தேதி இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-12-10 16:01 GMT

இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் வருகிற 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை ஆட்சி கட்டிலில் இருந்து இறக்கி விட்டு மோடியை பிரதமர் பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்ற ஒரே இலட்சியத்துடன் எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்பட்ட கூட்டணிக்கு பெயர் இந்தியா. ஐ. என். டி.ஐ. ஏ. என அழைக்கப்படும் இந்த கூட்டணியின் தலைவர்கள் முதல் கூட்டம் ராஜஸ்தானில் நடைபெற்றது. பின்னர் மத்திய பிரதேசத்தில்  கூடினார்கள்.

ஒவ்வொரு கூட்டத்திலும் தேர்தல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அவர்கள் கருத்துக்களை கூறியிருந்தார்கள்.  காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள இந்த கூட்டணியில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதேபோல  பீகார் முதன் மந்திரி நிதிஷ்குமார், மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்த ஆறாம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் 3ஆம் தேதி வெளியான 5 மாநில தேர்தல் முடிவில் பாரதிய ஜனதா மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அந்த கூட்டத்தில் பங்கேற்க கூட்டணி நிகழ்ச்சி தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

முதல்வர் ஸ்டாலின் சென்னையில் வெள்ள பாதிப்பினை காரணம் காட்டி வர முடியாது எனக் கூறிவிட்டார் அதேபோல மற்ற கூட்டணி கட்சி தலைவர்களும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கூட்டத்தை புறக்கணித்தனர். ஆனால் தேர்தல் தோல்வி தான் உண்மையான காரணம் என்பது காங்கிரசுக்கும் தெரியும். வேறு வழியில்லாமல் அன்று நடைபெற இருந்த கூட்டத்தை காங்கிரஸ் கட்சியை தலைமை தள்ளி வைத்தது. இந்நிலையில் டெல்லியில் வருகிற 19-ம் தேதி இந்தியா கட்சி கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக இப்போது காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News