Sambar in Tamil-சுவையான,வாசமிகு சாம்பார் வைக்கலாம் வாங்க..!
ஒரு வட்டார வழக்கு உள்ளது, அதாவது பருப்பு இல்லாமல் கல்யாணமா? அதிலும் சாம்பார் என்றால் கத்திரிக்காய், முருங்கைக்காய் இல்லாமல் விசேஷம் இருக்காது.
Sambar in Tamil
நமது வழக்கத்தில் சாம்பார் இல்லாமல் எந்த விசேஷ உணவுகளும் கிடையாது. என்னதான் பிரியாணி, துரத்த உணவுகள் வந்தாலும் கடைசியாக கொஞ்சம் வெள்ளை சாதம் போட்டு சாம்பாருடன் சிறிது ரசத்தையும் கலந்து சாப்பிட்டால் தான் ஒரு முழுமையான சாப்பாடு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்.
Sambar in Tamil
பொதுவாக தமிழ்நாட்டில் சாம்பார் நமது அன்றாட உணவு பழக்கத்தில் இன்றியமையாதது. சாம்பாருடன் சாதம் பிணைந்து சாப்பிட்டால் தான் மதிய உணவு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். அப்படியான சுவைமிகு சாம்பாரை சுவையாக சமைத்தால் தானே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அதோடு, சாம்பாரில் பருப்பு மற்றும் காய் வகைகள் அதிகம் சேர்க்கிறோம், இதனால் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் இதில் மற்றும் குறைந்த அளவிலான கொழுப்பு இருப்பதனால் உடல் எடையை பராமரிப்பதற்கும் உதவும்
Sambar in Tamil
சாம்பார்
சாம்பார் வீட்டிலேய எளிய முறையில் செய்யலாம். இவை பருப்பு மற்றும் காய்கறிகள் கொண்டு செய்யப்படுகின்றன. காய்கள் மற்றும் பருப்பு கலந்த செய்யப்படுகின்றன. என்பதால் உடலுக்கு தேவையான சக்தி எளிதில் கிடைக்கும்.
தேவையான பொருட்கள் சாம்பார்
பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள்.
1. 4 to 5 சிவப்பு மிளகாய்
2. 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
3. 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
4. 1 டேபிள் டேபிள் வரமல்லி
5. ½ டேபிள் ஸ்பூன் வெந்தயம்
6. ½ டேபிள் ஸ்பூன் சீரகம்
Sambar in Tamil
சாம்பார் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
1. 1 கப் துவரம் பருப்பு
2. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
3. 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் தேவைக்கேற்ப
4. 2 to 3 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
5. ¾ டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள்
6. உப்பு தேவைக்கேற்ப
7. சிறிதளவு புளி
8. 10 to 12 சின்னவெங்காயம்
9. 1. தக்காளி நறுக்கியது
10. 1 முருகைக்காய் சிறிதாக நறுக்கியது
11. 1 கேரட் சிறிதாக நறுக்கியது
12. 7 to 8 பீன்ஸ் சிறிதாக நறுக்கியது
Sambar in Tamil
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
1. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
2. ½ டேபிள் ஸ்பூன் கடுகு
3. ½ டேபிள் ஸ்பூன் சீரகம்
4. ¾ டேபிள் ஸ்பூன் வெந்தயம்
5. 1 அல்லது 2 டேபிள் ஸ்பூன் சிவப்பு மிளகாய்
6. சிறிதளவு கருவேப்பிலை
Sambar in Tamil
செய்முறை
சாம்பார் பொடி செய்வது
1. ஒரு கடாயில் மிதமான தீயில் 4 முதல் 5 சிவப்பு மிளகாய் , 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு மற்றும் 1 ஸ்பூன் ஸ்பூன் உளுத்தம் பருப்பு ,சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
2. 1 டேபிள் ஸ்பூன் வரமல்லி சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். அதனை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைக்கவும் .
3. பின்பு ½ டேபிள் ஸ்பூன் வெந்தயம் பொன்னிறமாக வறுக்கவும் . அதனுடன் மிதமான தீயில் ½ டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு நிமிடம் வாசனை வரும் வரை வறுக்கவும்.
4. பின்பு இவை அனைத்தும் ஒன்றாக சேர்த்து அரைத்து பொடியாக எடுத்து வைக்கவும்.
Sambar in Tamil
சாம்பார் செய்வது எப்படி?
1. முதலில் 1 கப் துவரம் பருப்பு, 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கர் அல்லது ஒரு பாத்திரத்தில் வேகவிடவும். குக்கரில் வேகவைத்தால் 2 முதல் 4 வேகவிடவும். வரை விடவும். பாத்திரத்தில் வேகவைத்தால் 10 நிமிடங்கள் வேகவிடவும்.பின்பு அதனை நன்றாக மசிக்கவும். அதனை தனியாக ஒரு பத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
2. ஒரு பெரிய பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும சின்ன வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி மற்றும் வெட்டிவைத்த காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்னர் 1 அல்லது 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் அல்லது காரத்திற்கு ஏற்ப்ப சேர்த்து சாம்பாருக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
3. வேகும் வரை ஒரு சின்ன பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீரை சுடவைத்து அதில் புளி சிறிதளவு அதில் ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து ஊறவிடவும்.
4. காய்கறிகள் நன்றாக வெந்தவுடன் அதில் ¾ டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் ,2 அல்லது 3 டேபிள் ஸ்பூன் முதலில் அரைத்து வைத்த சாம்பார் பொடியை சேர்க்கவும். ¾ டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து 3 அல்லது 5 நிமிடங்கள் களித்து புளி மற்றும் மஞ்சத்தூள் சேர்த்த தண்ணிரை சிறிதளவு சேர்க்கவும்.
5. பின்பு அதில் முதலில் வேகவைத்து மசித்த பருப்பை சேர்க்கவும். மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கி அதனுடன் தூவி விடவும்.
Sambar in Tamil
தாளிப்பது
1. ஓரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு ,சீரகம் ,வெந்தயம்,சிவப்பு மிளகாய் ,கருவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும்.
2. பின்பு நன்றாக கொதித்த சாம்பாரில் தாளித்ததை உடனே சேர்க்கவும் நன்றாக சாம்பாரில் விடவும்விடவும்
3. இதோ இப்போது சுவையான சாம்பார் தயார்.