தண்ணீர் பூமியின் அமிழ்தம் : அதை சேமிப்பது அவசியம் தமிழில்..
Save Water in Tamil Essay-'நீரின்றி அமையாது உலகு' என்று கூறுவதில் இருந்து தண்ணீரின் அவசியம் குறித்து வள்ளுவன் வலியுறுத்துவதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்..
Save Water in Tamil Essay
'நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவன் வாக்கு. தண்ணீர் இந்த பூமியின் அமிழ்தம் என்று சர்.சி.வி.ராமன் கூறியுள்ளார். அந்த அளவுக்கு நீர் அவசியமானது. நீரில்லாத உலகத்தை எண்ணிப்பார்க்கவே அச்சமாக உள்ளது. 'ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்' என்று நீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே கூறப்பட்டுள்ளது.
தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவம் (Importance Of Water And Need to Save Water)
நாடு முழுவதும் இல்லை உலகம் முழுவதுமே தண்ணீரின் தேவை அதிகரித்து வருகிறது. பல்வேறு காரணங்களுக்காக தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. அதில் முக்கியமாக மனித தேவைகளில் உணவு தயாரிப்பு, குளிப்பது, ஆடைகள் துவைப்பது என நீள்கிறது. இன்னொன்று விவசாய பயன்பாடு மற்றும் தொழிற்சாலை பயன்பாடு என இன்னொரு புறம் தேவை நீள்கிறது.
தண்ணீர் கிடைப்பதற்கு முக்கிய மூலம் மழை மட்டுமே. மழை பொய்த்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். வனங்கள் அழிக்கப்பட்டதால் பருவத்தில் பெய்யவேண்டிய மழையும் பொய்த்துப்போனது. அதனால் மழை பெய்யும் காலங்களில் நீரை சேமிப்பது அவசியம் ஆகும். கடலில் சென்று சேரும் நீரை அணைகள், குளங்கள், ஏரிகள்,கண்மாய்கள் என பல வடிவங்களில் நீரை சேமிக்க ஏற்பாடுகள் செய்வது அவசியம்.
ஒரு அரசு மட்டுமே தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துவிட முடியாது. அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அதைவிட முக்கியம். நீரை சிக்கனமாக பயன்படுத்தும் முறைகள் மற்றும் நீரை சேமிப்பதன் அவசியம் குறித்து நம்மிடையே விழிப்புணர்வு ஏற்படவேண்டும்.
தண்ணீரை தங்கள் தேவைக்கு மட்டும் சிக்கனமாக பயன்படுத்துவது மட்டும் நம் கடமையல்ல. நீர் ஆதாரத்தை பெருக்குவதும் நம் கையில் தான் உள்ளது. அதற்கு நமது பங்களிப்பாக வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பது அவசியம். ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தினை கடைப்பிடிக்க வேண்டும்.
தண்ணீர் குறித்த சில புள்ளிவிவரங்கள் (Few Statistics Related To Water)
பூமி 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. மீதி இருக்கும் 30 சதவீதம் மட்டுமே நிலப்பரப்பு. அதற்குள் தான் நாடும், காடும், மலையும் எல்லாமும் அடங்கியுள்ளது. 70 சதவீத நீர் பகுதியில் 97.5 சதவீத நீர் கடல்பரப்பு. அதாவது உப்பு நீர். அதாவது 2.5% மட்டுமே பயன்படுத்த தகுதியான நீராகும். அதிலும் மூன்றில் ஒரு பங்கு பனிப்பாறைகள். இவையெல்லாம் போக மிஞ்சியிருக்கும் சொற்ப அளவே அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீர். உலக அளவில் உள்ள நிலத்தடி நீரில் 24% நிலத்தடி நீரை இந்தியா பயன்படுத்துகிறது. அதாவது நீரை பூமியில் இருந்து உறிந்து எடுக்கிறோம்.
உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் தண்ணீர் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால் சூழல் மாற்றத்தால் ஏற்படும் பருவமாற்றங்களால் மழை பெய்வது குறைகிறது அல்லது கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. ஒன்று தண்ணீர் இல்லாமல் வறண்டு போகும். அல்லது வெள்ளப்பெருக்கெடுத்து துவம்சம் செய்யும்.
இந்தியாவை பொறுத்தவரை 60 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் தண்ணீருக்காக தவித்து வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.2050ம் ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்படும் மக்கள் பில்லியனை தாண்டலாம் என்ற பகீர் தகவலும் உள்ளது. 2040ம் ஆண்டுகளில் உலக அளவில் 33 நாடுகள் பெரிய அளவிலான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
தண்ணீர் சேமிப்புக்கான உதவிக்குறிப்புகள் (Water Saving Tips)
தண்ணீரை சேமிப்பதற்கு பெரிதாக எதுவும் செய்யத்தேவையில்லை. நமது அன்றாட வாழ்வில் நாம் செலவு செய்யும் தண்ணீரை கொஞ்சம் சிக்கனமாக பயன்படுத்தினாலே போதுமானது. தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரை சேமிப்பதன் மூலம் பல ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் சேமிப்பாகும். இப்படி ஒரு வீடு, வீடுகள், ஊர், ஊர்கள், மாவட்டம்,மாவட்டங்கள், மாநிலம்,மாநிலங்கள் என விரியும்போது பல லட்சம் கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படும். ஒரு கை ஓசையால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், ஊரே கைதட்டினால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். நாள்தோறும் வீட்டில் குளியலறையில் , சமையலறையில் மற்றும் சுற்றுப்புறத்தில் உபயோகிக்கும் நீரை எப்படி சேமிக்கலாம் என்று இங்கு விரிவாக கூறப்பட்டுள்ளது.
குளியலறையில் தண்ணீரை சேமித்தல் (Saving Water In The Bathroom)
1. குளிக்க வாளியை பயன்படுத்தவும் (Use Bucket For Bath)
குளிப்பதற்கு ஷவரை பயன்படுத்தாமல் வாளியை பயன்படுத்த வேண்டும். முதலில் வாளியில் தேவையான தண்ணீரை நிரப்பி குளிக்க செல்ல வேண்டும். பைப்பை அல்லது ஷவரை திறந்து குளிப்பதால் நமக்கு தெரியாமலே நிறைய தண்ணீர் செலவாகும். குளிப்பதற்கு குறைந்த அளவு நீரையே பயன்படுத்துங்கள்.
2. பல் துலக்கும் போது பைப்-ஐ மூடவும் (Turn Off Tap While Brushing )
பல் துலக்கும் போது தண்ணீரை மூடி வைப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரை சேமிக்க முடியும். பெரும்பாலோனோர் தண்ணீரை மூடாமல் பல் துலக்குகின்றனர். இதனால் தண்ணீர் வீணாகிறது. பற்களைத் துலக்கும் போது தண்ணீரை மூடினால் ஒரு நாளைக்கு 13 லிட்டர் தண்ணீர் சேமிப்பாகிறது.
3. முகம் மற்றும் கைகளை கழுவும்போது பக்கெட் பயன்படுத்தலாம் (Use bucket While Washing Face And Hand)
குழாயை திறந்து முகம், கை,கால் கழுவுவதை விட பாத்திரத்தில் தண்ணீரை பிடித்து கப் மூலம் முகம்,கை, கால்களை சுத்தம் செய்யலாம். தினமும் இரு முறை முகம் மற்றும் கைகளை கழுவு பழக்கம் உள்ளவர்கள் குறைந்தளவு தண்ணீரை பயன்படுத்தலாம். இதனால் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.
4. பைப் கசிவுகளை சரிசெய்யவும் (Fix Your Leakage)
வீட்டில் குழாய்களில் நீர் கசிவு இருக்கிறதா என அடிக்கடி உறுதி செய்யா வேண்டும். பலவீடுகளில் நீர் கசிவுகளை கண்டுகொள்வதில்லை. ஒரு வினாடிக்கு ஒரு சொட்டு என்ற வேகத்தில் நீர் கசியுமானால் ஆண்டொன்றுக்கு சுமார் 10,200 லிட்டர் நீர் வீணாகும். எனவே சிறிதளவு நீர் தானே என கவனக்குறைவாக இருப்பது சரியல்ல.
5. ஷேவிங் செய்யும் போது பைப்பை மூடவும் (Turn Off Tap while Shaving)
ஷேவிங் செய்யும் போதும், முகம் கழுவும் போதும் குழாயை பயன்படுத்தாமல் மக் பயன்படுத்தலாம். சுடுநீருக்காக காத்திருக்கும் பொழுதே முகச்சவரம் செய்து விடுவது நல்லது.பின் குவளையில் நீர் நிரப்பி முகம் கழுவலாம். ஷேவிங் செய்யும் போது நுரையை துணியால் துடைத்து விட்டு பின்னர் சிறிதளவு நீரில் முகம் கழுவலாம். இதனால் தண்ணீர் சேமிக்கப்படும்.
6. புதிய தொழில்நுட்ப பைப்புகளை பயன்படுத்துதல் வேண்டும் (Use Advance Technology Tap)
புதிய தொழில்நுட்ப பைப்புகளை வீடுகளில் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக நுண் துகளாக்கல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது புதிய குழாய்கள் வந்துள்ளன. இவை குழாயில் இருந்து வரும் தண்ணீரை பனி போன்ற துாறலாக வெளியேற்றும். இதனால் தண்ணீர் ஓட்டம் ஒரு நிமிடத்திற்கு 12 லி., என்பது 600 மி.லி.,யாக குறைகிறது. இதனால் ஒரு நாளைக்கு 35 லி., தண்ணீரை சேமிக்கலாம். இதேபோல் சென்சார் பொருத்திய குழாய்களும் பொருத்தலாம். நாம் கையை நீட்டும் போது மட்டும் தண்ணீர் வரும்.இதுவும் தண்ணீர் சேமிப்புக்கு சிறப்பான வடிவமைப்பாக்கும்.
7. ஷவரை தவிர்க்கலாம் (Avoid Shower)
ஷவரில் குளிக்கும் பழக்கம் இருப்பவர்கள் ஷவரை தவிர்த்து வாளியில் தண்ணீர் எடுத்து குளிக்கலாம். ஒருவேளை ஷவரில் குளித்தால் ஷாம்பூ மற்றும் சோப்பு போடுகையில் ஷவரில் நீரை ஓடவிட்டுக் கொண்டே இருக்க வேண்டாம். தேவையான நேரத்தில் திறந்துகொள்ளலாம்.
8. பிளஷ் செய்ய ஒருமுறை பயன்படுத்திய நீரைபயன்படுத்தவும் (Used Water For Flush)
டாய்லெட்டை ஃபிளஷ் செய்வதற்கு தண்ணீர் அதிகம் தேவை. உங்களிடம் இரட்டை ஃபிளஷ் டாய்லெட் இருந்தால் பொருத்தமான சமயங்களில் அரை ஃபிளஷ் பட்டனை உபயோகியுங்கள். இதன் மூலம் நான்கு பேர் உள்ள ஒரு குடும்பம் ஒரு ஆண்டில் 36,000 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். மேலும் பிளஷ் செய்ய பயன்படுத்திய நீரை பயன்படுத்தலாம்.
சமையலறையில் தண்ணீரை சேமித்தல் (Saving Water In the Kitchen)
1. வீணாகும் நீரை பயன்படுத்துங்கள் (Reuse Water)
காய்கறிகள், பாத்திரங்கள் கழுவும் போது அதிகளவு நீர் சாக்கடைக்குள் செல்கிறது. இதை தவிர்க்க அந்த நீரில் உள்ள கழிவுகளை வடிகட்டி ஒரு தொட்டியில் அல்லது பாத்திரத்தில் சேமிக்கலாம். இப்படி சேமித்த நீரை வாசல் தெளிக்க, தோட்டங்களுக்கு பயன்படுத்தலாம். தண்ணீர் தொட்டியில் அழுக்குப் படிந்திருந்தால் குழாயில் வரும் தண்ணீர் கலங்கலாக இருக்கும். இந்த நீரில் படிகாரக் கல்லை போட்டால் நீர் தெளிந்து விடும். பின்னர் இதனை பயன்படுத்தலாம்.
2. டிஷ் வாஷரை குறைவாக பயன்படுத்துங்கள் (Less Use Of Dish Washer)
டிஷ்வாஷர் எனப்படும் பாத்திரம் விலக்கும் மெஷின் அதிக நீரை எடுத்து கொள்ளும். பாத்திரங்கள் விலக்க இந்த மெஷின் முழுவதும் நீரை நிரப்பி பயன்படுத்த வேண்டும். டிஷ்வாஷரில் ஒரு முறை பாத்திரங்களை கழுவினால் 8 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. இருப்பினும் டிஷ்வாஷர் முழுவதுமாக நிறைந்த பிறகு அதை பயன்படுத்த வேண்டும். இதனால் முடிந்த அளவிற்கு டிஷ்வாஷரில் பாத்திரம் விலக்குவதை தவிர்க்க வேண்டும்.
3. கையால் பத்திரங்களை கழுவ வேண்டும் (Wash Dish By Hand)
சமையல் வேலைகள் முழுமையாக முடிந்த பின் ஒரே நேரத்தில் அத்தனை பாத்திரங்களையும் கழுவ வேண்டும். குழாயை திறந்துவிட்டு நேரடியாக பாத்திரங்களை கழுவாமல் பெரிய பாத்திரத்தில் தண்ணீரை பிடித்து வைத்துக் கொண்டு கழுவினால் தண்ணீர் மிச்சமாகும்.
4. பாத்திரங்கள் துலக்கும் போது பைப்பை மூடவும் (Turn Off Tap While Dish Wash)
கையால் பாத்திரம் கழுவும் போது குழாயை திறந்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டாம். ஒரு பக்க சிங்கில் சோப்பு நீரை நிரப்பி அதில் பாத்திரங்களை போடுவதன் மூலம் எல்லா பாத்திரத்திலும் குறைவான அளவு சோப்பே படும் அதை கழுவுவதற்கும் குறைவான நீரே தேவைப்படும். பாத்திரங்கள் துலக்கும் போது பைப்பை மூடி விட வேண்டும். அனைத்து பாத்திரங்களையும் துலக்கிய பின்னர், பைப்பை திறந்து கழுவலாம்.
5. காய்கறிகளை பாத்திரத்தில் வைத்து கழுவுங்கள் (Use Pot to Wash Vegetables)
காய்கறிகளை வெட்டியதும் ஒரே பாத்திரத்தில் போட்டு கழுவினால், பல லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படும். மேலும் காய்களை பாத்திரத்தில் வைத்து கழுவுவதால், கழுவிய பின்னர் அந்த நீரை செடிகளுக்கு பயன்படுத்தலாம்.
6. முடிந்தவரை நீராவியில் காய்களை வேக வைக்கவும் (Steam Whenever Possible)
காய்கறிகளை முடிந்த வரை நீராவியில் வேக வைக்க வேண்டும். காய்களை வேக வைக்க அதிக தண்ணீர் தேவைப்படும். மேலும் நிறைய நேரமும் எடுத்து கொள்ளும். நீராவியில் காய்களை வேக வைத்தால் குறைந்த அளவு தண்ணீரே தேவைப்படும். மிகவும் குறைந்த நேரத்தில் காய்கள் விரைவில் வெந்து விடும். இதனால் ஒரு குறிப்பிட்ட அளவு தண்ணீரே செலவாகும்.
7. நீர்ப்பாசன குழாய்களை நிறுவவும் (Install Water-Efficient Faucets)
சமையலறையில் பாத்திரம் விலக்கும் டப்பை கழுவ நிறைய தண்ணீர் தேவைப்படும். அதற்கு சுழலும் குழாயை பொருத்த வேண்டும். அதனால் குறைந்த தண்ணீர் செலவில் கழுவி விடலாம். மேலும் சென்சார் பொருத்திய குழாய்களை வீடுகளில் பொருத்த வேண்டும். இதனால் நம் தேவைக்கு மட்டும் தண்ணீர் பயன்படுத்த முடியும் என்பதால் நீர் வீணாகாது.
8. அழுக்கு உணவுகளை கழுவுவதை தவிர்க்கவும் (Avoid Rinsing Dirty Dishes)
சமையல் பாத்திரம் மற்றும் சாப்பாட்டு தட்டுகளை சாப்பிட்டவுடன் கழுவி விடுங்கள். காய்ந்தால் கூடுதல் நீர் தேவைப்படும். மேலும் சாப்பிட்ட தட்டுகள், சமைத்த பாத்திரங்களை எடுத்து பாத்திரம் விலக்கும் இடத்தில் போட வேண்டும். இல்லையென்றால் அந்த கழிவுகளால் உண்டாகும் அழுக்குகளையும் கழுவ தண்ணீர் அதிகம் தேவைப்படும்.
துணி துவைத்தலில் தண்ணீரை சேமித்தல் (Saving Water While Washing Clothes)
1. பழைய சலவை இயந்திரத்தை மாற்றவும் (Replace Your Old Washing Machine)
பழைய சலவை இயந்திரத்தின் செயல்திறன் குறைந்தால், அதனை உடனடியாக மாற்றி விடுங்கள். ஏனெனில் பழைய சலவை இயந்திரங்கள் சேதமானால் நீர் வீணாகும். புதிய இயந்திரத்தை வாங்குவது நல்லது. மிகக் குறைந்தளவு தண்ணீரைப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும் வாஷிங் மெஷினை பயன்படுத்துங்கள்.
2. வெறும் சலவை இயந்திரத்தை இயக்க வேண்டாம் (Don't Run Empty Washing Machine)
சலவை இயந்திரத்தில் துணிகளை நிரப்பாமல் இயக்க வேண்டாம். எப்போதும் சலவை இயந்திரம் முழு கொள்ளளவை எட்டும் வரை பொறுத்திருந்து துணிகளை துவைக்க வேண்டும். சலவை இயந்திரம் முழுவதும் நீரை நிரப்பி வெறும் இயந்திரத்தை இயக்குவதால் எவ்வித பலனும் இல்லை. இதனால் தண்ணீர் வீணாவது மட்டுமின்றி மின்சாரமும் வீணாகிறது.
3. மொத்தமாக துணி துவைக்க வேண்டும் (Wash Less Often)
சலவை இயந்திரத்தில் துணியைப் போடும் போது, அதன் முழு கொள்ளளவிற்கு துணிகளைப் போடுவது நல்லது. குறைவாக போட்டாலும், நிறைத்துப் போட்டாலும் ஒரே அளவிற்கான நீரைத் தான் சலவை இயந்திரங்கள் எடுத்து கொள்ளும். வாஷிங் மெஷினை "டிரெய்ன்" செய்யும் போது வெளியேறும் சோப் தண்ணீரை வீணாக பாத்ரூமில் விடுவதைக் காட்டிலும், எண்ணெய் பிசுக்கு சமையல் பாத்திரங்களை அதில் ஊறவைக்கலாம். அல்லது கால் மிதி, சாக்ஸ் போன்றவற்றை ஊற வைக்கலாம்.
4. சலவை இயந்திரத்தை அதிகமாக பயன்படுத்தாதீர்கள் (Stop Over Flow)
வீடுகளில் சேரும் அழுக்கு துணிகளை ஒரே நேரத்தில் துவைப்பதன் மூலம் தண்ணீரை சேமிக்க முடியும். பெரும்பாலும் கையில் துவைப்பதை பழக்கப்படுத்தி கொள்வதே நல்லது. இதனால் குறைந்த அளவு தண்ணீர் செலவாகும்.
5. கார் கழுவிய நீரை மீண்டும் பயன்படுத்துங்கள் (Reuse Water after Car Wash)
கார் கழுவிய நீரை துணிகள் ஊறவைக்க பயன்படுத்தலாம். பெரும்பாலும் பக்கெட்டுகளில் தண்ணீரை வைத்து துணிகளால் காரை துடைப்போம். இந்த நீரை வீணாக்காமல் துணிகளை ஊறவைக்கலாம். பின்னர் நல்ல தண்ணீரில் நாம் துவைத்து, அலசுவதால் சுத்தமாக இருக்கும்.
6. துணி துவைக்க குளிர்ந்த நீரை பயன்படுத்துங்கள் (Use Cold Water To Wash)
சலவை இயந்திரத்தில் துணி துவைக்க குளிர்ந்த நீரை பயன்படுத்த வேண்டும். கறைகள் படிந்த துணிகளை வாஷிங் மெஷினில் போடும் போது குளிர்ந்த நீரில் அலசினால் துணியில் படிந்த கறைகள் எளிதில் நீங்கிவிடும். இதனால் துவைக்கும் போது பயன்படுத்தப்படும் நீரை மிச்சப்படுத்தலாம். குளிர்ந்த நீரை பயன்படுத்துவதால் எளிதில் அழுக்குகள் நீங்கும்.
வெளியில் தண்ணீரை சேமித்தல் (Outdoor Water Saving )
1. தோட்டத்திற்கு குழாய்களை பயன்படுத்த வேண்டாம் (Don't Use hosepipe for Garden)
தோட்டத்திற்கு குழாய்களை பயன்படுத்துவதால் நிறைய நீர் செலவாகிறது. கோடை காலத்தில் வீடுகளில் உள்ள தோட்டங்களுக்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. செடிகளின் கீழே தரைத்தளங்களில் தென்னை நார்களை விரித்து அதில், தண்ணீர் தெளித்தாலே போதும் நீரை அது உறிஞ்சி செடிகளின் வேர்களுக்கு உயிர் கொடுக்கும். இப்படி செய்வதால் நீரும் குறைவாக செலவாகும்.
2. கார் கழுவுவதற்கு வாளியை பயன்படுத்துங்கள் (Use Bucket for Car Wash)
பெரும்பாலானோர் கார் கழுவும் போது நேரடியாக குழாயை பயன்படுத்துவர். குழாயில் வரும் நீரை கையில் பிடித்தவாறு கார் கழுவுவது கணிசமான நீர் வீணாகிறது. ஒரு பக்கெட்டில் தண்ணீரை எடுத்து காரை கழுவினால் போதுமானது.கார் கழுவிய நீரை செடிகளுக்கும் ஊற்றலாம்.
3. நீர் ஆவியாவதை குறைக்க நீச்சல் குளங்களை முடி வையுங்கள் (Cover Swimming Pools to Reduce Evaporation)
தற்போது வீடு, பார், விடுதிகளில் நீச்சல் குளம் உள்ளது. நீச்சல் குளம் பெரும்பாலும் வெட்ட வெளியாக இருப்பதால், கோடை காலத்தில் பெரும்பாலான நீர் ஆவியாகிறது. இப்படி குறையும் நீர் மேலும் நிரப்பப்படுகிறது. இதனால் மீண்டும் நீர் ஆவியாகி வீணாகிறது. இதனை தவிர்க்க நீச்சல் குளத்தை முடி வைப்பது சிறந்தது.
4. முடிந்தவரை கழிவு நீரை குறைக்கவும் (Reduce Waste Water Where Possible)
வீணாகும் கழிவு நீரை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். காய்கள், பாத்திரங்கள் கழுவ குறைந்த அளவு நீரை கொண்டே சுத்தம் செய்ய வேண்டும். கை கழுவும் நீரை தோட்டங்களுக்கு பாய்ச்ச வேண்டும். இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். அரிசி கழுவிய நீரை வீட்டுத்தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் ஊட்டமாக வளரும்.
5. நீர்ப்பாசன முறையை பராமரிக்கவும் (Maintain Your Irrigation System)
தாவரங்கள் மற்றும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச நீர்ப்பாசன முறையை பராமரிக்க வேண்டும். சொட்டு நீர் பாசனம் போன்ற முறைகளை பயன்படுத்துவதால் மரங்கள் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி தண்ணீரும் சேமிக்கப்படுகிறது. விவசாயிகள் அதிக நீரை உறிஞ்சும் பயிர்களை பயிர் செய்வதை விடப் பருவநிலைக்கு ஏற்ப தண்ணீரை குறைவாக எடுக்கும் பயிர்களை சாகுபடி செய்யலாம்.
6. சுத்தம் செய்ய குழாய்க்கு பதில் துடைப்பம் பயன்படுத்தவும் (Use a Broom to Clean)
வீடு மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்த குழாய்களில் வரும் நீரை நேரடியாக சுத்தம் செய்யாமல் துடைப்பத்தால் சுத்தப்படுத்தாலாம். இதனால் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி தூய்மையாக்கலாம்.
நீரைப் பாதுகாப்பதற்கான தொழில்நுட்ப முறைகள் (Technical Methods To Conserve Water)
இன்றைய நவீன காலத்தில் நீரைப் பாதுகாப்பதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன. இவைகளை பயன்படுத்தி நீர் சேமிப்புக்கு வழிவகுக்கலாம். தினமும் எவ்வளவு நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிந்து கொள்ளலாம்.
ஜல் சக்தி அபியான் திட்டம் (Jal Sakthi Abhiyan Campaign) :
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தண்ணீர் பிரச்சினை தலைதூக்கி உள்ளது. இந்த பிரச்சினைகளை களையவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும் மத்திய அரசு 'ஜல்சக்தி அபியான்' என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது. நாடு முழுவதும் 255 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்சனைகளை சமாளிக்க 255 கூடுதல் மற்றும் இணை செயலாளர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
இவர்கள் அந்தந்த மாவட்டங்களின் பொறுப்பாளர்களாக இருந்து தண்ணீர் சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்த பணிபுரிவார்கள். 255 மாவட்டங்களில் உள்ள 1592 தாலுகாக்களில் உள்ள நீர்நிலைகள் கண்காணிக்கப்படும். மத்திய-மாநில நீர் வளத்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், நீர்வள இன்ஜினீயர்கள், அதிகாரிகள் பலரும் இந்த திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2