conventional way of thinking-யார் கொள்ளையர்..? ஒரு அனுபவப்பாடம் சொல்லும் கதை..!

conventional way of thinking-ஒரு கொள்ளைச் சம்பவம் வாழ்க்கையின் அனுபவப்படங்களாக எப்படி விவரிக்கப்படுகிறது என்பதை இந்த கதையின் மூலம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Update: 2023-04-20 13:10 GMT

conventional way of thinking- சூழ்நிலையை பயன்படுத்தும் விளக்கங்கள்.(கோப்பு படம்)

ஜிம்பாப்வே நாட்டில் ஒரு கொள்ளைச் சம்பவத்தின் போது, வங்கிக் கொள்ளையன் வங்கியில் இருந்த அனைவரையும் நோக்கி,

"யாரும் அசைய வேண்டாம். பணம் அரசுக்குச் சொந்தமானது. ஆனால், உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது." என்றதும் வங்கியில் இருந்த அனைவரும் அமைதியாக தரையில் படுத்தனர். இவ்வாறு சூழலுக்கு ஏற்ப ஒரு கருத்தை வலியுறுத்துவது "மனதை மாற்றும் கருத்து" ( Mind Changing Concept) என்று அழைக்கப்படுகிறது. இது வழக்கமான சிந்தனை முறையில் இருந்து மாறுகிறது.

அதேபோல அந்த வங்கியில் ஒரு பெண் கொள்ளையர்களின் கொள்ளை முயற்சியை திசை திருப்பும் வகையில் சில அங்கங்கள் அவர்களுக்கு தெரியும்படியாக மேஜையில் படுத்திருந்தபோது, கொள்ளையன் அவளை நோக்கி, "தயவுசெய்து நாகரீகமாக இருங்கள். இது ஒரு கொள்ளை நிகழ்வு. கற்பழிப்புச் சம்பவம் அல்ல." என்றான். இது "தொழிலில் நுட்பமாக இருத்தல்" (Being Professional)என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் என்ன செய்யப் பயிற்றுவிக்கப்படுகிறீர்கள் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். நம்ம பாசையில் 'காரியத்தில் கண்ணாயிரு' என்பது போல.

conventional way of thinking


வங்கிக்கொள்ளையை முடித்துக்கொண்டு கொள்ளையர்கள் வீடு திரும்பியதும், ஒரு எம்பிஏ பட்டம் பெற்ற அனுபவம் இல்லாத சிறிய கொள்ளையன், வெறும் 6ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள மூத்த கொள்ளையனிடம் சொன்னான்,

"அண்ணா, இந்த கொள்ளையில் நமக்கு எவ்வளவு பணம் கிடைத்தது என்று எண்ணுவோம் வாங்க. எனக்கு ரொம்பவும் ஆவலாக உள்ளது." என்றான்.

அதற்கு பெரிய கொள்ளையன் மறுத்துவிட்டு சொன்னான், "நீ ரொம்ப முட்டாள் பையனாக இருக்கிறாய். இவ்வளவு பணம் இருக்கிறது. அதை எண்ணுவதற்கு நமக்கு நீண்ட நேரம் எடுக்கும். இன்றிரவு, வங்கியில் இருந்து நாம் எவ்வளவு கொள்ளையடித்தோம் என்பதை டிவி செய்தி சொல்லிவிடும்" என்றான் பெரிய சிரிப்புடன். இது "அனுபவம்" (Experience.)என்று அழைக்கப்படுகிறது. இப்போதெல்லாம் ஏட்டுக்கல்வியை விட அனுபவமே முக்கியமாக கருதப்படுகிறது.

இப்போ வங்கியில்...

கொள்ளையர்கள் வெளியேறிய பிறகு, வங்கி மேலாளர், காவல்துறையை விரைவாக அழைக்குமாறு வங்கி மேற்பார்வையாளரிடம் கூறினார். ஆனால் மேற்பார்வையாளர் அவரிடம் கூறினார், "கொஞ்சம் காத்திருங்கள். நமக்காக வங்கியில் இருந்து 10 மில்லியன்  டாலரை எடுத்து பாதுகாப்பாக வைத்துவிட்டு பின்னர் போலீசை அழைப்போம். வங்கியில் இருந்து நாம் ஏற்கனவே மோசடி செய்த 70 மில்லியன் டாலருடன் கொள்ளைக் கணக்கைச்சேர்த்துக் கொள்வோம்". என்றார் சமயோசிதமாக. இது "அலையில் நீந்துதல்" (Swim with the tide) என்று அழைக்கப்படுகிறது.

சாதகமற்ற சூழ்நிலையை நமக்கு சாதகமாக மாற்றுவது. " இப்படி மாதா மாதம் ஒரு கொள்ளை நடந்தால் நன்றாக இருக்கும் போல." என்கிறார் மேற்பார்வையாளர். இது "சந்தர்ப்பவாதம்"(Opportunism) என்று அழைக்கப்படுகிறது. அதாவது நமது வேலையை விட தனிப்பட்ட மகிழ்ச்சி முக்கியமானது.

conventional way of thinking

அடுத்த நாள், வங்கியில் இருந்து 100 மில்லியன் டாலர் எடுக்கப்பட்டதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்தன. கொள்ளையர்கள் மகிழ்ந்து போய் 'அடடா 100 மில்லியன் டாலர்' என்று எண்ணி...எண்ணி.. எண்ணி.. எண்ணிக்கொண்டிருந்தனர்.

ஆனால் அவர்களால் 20 மில்லியன் டாலரை மட்டுமே கணக்கிட முடிந்தது. கொள்ளையர்கள் மிகவும் கோபமடைந்து அவர்களுக்குள் புகார் கூறிக்கொண்டார்கள். "நாம் உயிரைப் பணயம் வைத்து 20 மில்லியன் டாலரை மட்டுமே எடுத்தோம். ஆனால், வங்கி மேலாளர் 80 மில்லியன் டாலர்களை எந்த நோவும் இல்லாமல் எடுத்துக்கொண்டார்" என்று புலம்பினார்கள்.

"இப்பத்தான் தெரியுது. திருடனாக இருப்பதை விடப் படிப்பது நல்லதுதான் போலிருக்கு" என்று கூறிக்கொண்டனர், கொள்ளையர்கள். இதை "அறிவு என்பது தங்கத்துக்கு நிகரானது" ( Knowledge is worth as much as gold) என்று அழைக்கப்படுகிறது. அதாவது படிக்காத திருடனாக இருப்பதைவிட படித்த மேலாளராக இருப்பது சிறப்பு. (திருடுவதற்குத்தான்..)

conventional way of thinking

ஷேர் மார்க்கெட்டில் தனக்கு ஏற்பட்ட நஷ்டம், இப்போது இந்தக் கொள்ளையினால் ஈடுசெய்யப்பட்டதால் வங்கி மேலாளர் சிரித்து மகிழ்ந்தார். இது "வாய்ப்பைப் பயன்படுத்துதல்" (Seizing the opportunity) என்று அழைக்கப்படுகிறது. ரிஸ்க் எடுக்க தைரியமும் வேண்டுமல்லவா..? 'ரிஸ்க் எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிடறமாதிரி' என்று நம்மூரு வடிவேல் சொல்றமாதிரி.

அது சரி...முடிவுக்கு வந்துட்டோம்..அப்படியானால் இங்கு உண்மையான கொள்ளையர்கள் யார்? முடிவு உங்களுக்கே வெளிச்சம். 

Tags:    

Similar News