பூமர் அங்கிள் யாரு? எங்கிருந்து வந்தார் இந்த Boomer Uncle? தெரிஞ்சுக்குவோம் வாங்க..!
Boomer Uncle Meaning in Tamil-குறிப்பாக இவர்கள் 1946 முதல் 1965ம் ஆண்டுகளுக்கு மத்தியில் பிறந்தவர்களாக இருந்தால், இவர்களைத் தான் பூமர், பூமர் அங்கில்,பூமர் ஆண்டி என அழைக்கிறார்கள்.
Boomer Uncle Meaning in Tamil
தொடர்ந்து அட்வைஸ் போடுவது, யார் என்ன கூறினாலும் தன் கருத்தை அரை மணி நேரத்துக்குக் ஆற அமர நிதானமாக நல்ல நீளமாக விளக்குவது எல்லாம் இவர்களுடைய குணாதிசயங்களில் ஒன்றாக இருக்கலாம். இவர்களைத் தான் இணையத்தில் பூமர் அங்கில் என இணையத்தில் இளைய தலைமுறையினர் விமர்சித்து வருகின்றனர்.
தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் 'ஓகே பூமர் அங்கிள்' என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது, எப்படி உருவானது என்ற தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த விவரங்களை பார்ப்போம் வாருங்கள்.
பூமர் அங்கிள்:
சமீப காலமாக சமூக வலைதளங்களில் பூமர் அங்கிள் என்றொரு வார்த்தை அதிகளவு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது பரிதாபங்கள் என்ற பிரபல யூடியூப் சேனல் மூலம் பிரபலமான கோபி, சுதாகர் இருவரும் சமீபத்தில் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் இந்த பூமர் அங்கிள் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி இருந்தனர். இந்த வார்த்தைகள் தற்போது மீம்ஸ், ட்ரோல் வீடியோ என பலவற்றிலும் இடம் பிடித்து பிரபலமாக வைரலாகி வருகிறது. இந்த வார்த்தைக்கான அர்த்தம் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது என்றதொரு தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதாவது, பூமர் அங்கிள் என்ற வார்த்தை பெரியவர்களை காயப்படுத்தாமல், நாசூக்காக கலாய்க்க பயன்படுத்தப்படுகிறதாம். அதுவும் இந்த ஓகே பூமர் என்ற வார்த்தை பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பயன்பாட்டில் இருந்து வருவதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது. குறிப்பாக 1946 முதல் 1964 வரையிலான கால கட்டத்தில் பிறந்தவர்களை பேபி பூமர்ஸ் என்று சொல்லப்பட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. ஏனென்றால் உலகப் போர் முடிந்த காலகட்டத்தில் மேலை நாடுகளில் புதிய குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகளவு பூம் ஆகி அதாவது ஏற்றம் கண்டிருந்ததாம்.
போர் பயத்தில் தம்பதிகள் யாரும் ஜோடி சேராமல் இருந்திருப்பார்களோ என்று இப்போது சிந்திக்காத தோன்றுகிறது. போர் முடிந்ததும் அதனால்தான் குழந்தை பிறப்பு அதிகமாகி பூம் ஆகிய குழந்தை பிறப்பால் அப்போது பிறந்த குழந்தைகளை பூமர் எண்டு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதே போல அந்த காலகட்டத்தில் பிறந்தவர்கள் தான் பின் நாட்களில் பெரிய தொழில் வல்லுனர்களாகவும், பிரபலமானவர்களாக விளங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் தான் தங்களது அடுத்த தலைமுறையினரிடம் தாங்கள் கடந்து வந்த பாதைகளை பற்றி, நாங்கள் எல்லாம் அப்போதே அப்படி இருந்தோம் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார்கள். இந்த விஷயத்தை கேட்க முடியாத நபர்கள் தான் ஓகே பூமர் என்று ஜாலியாக கலாய்க்க துவங்கினார்களாம்.
அதே போல சொல்ல வந்த விஷயத்தை பூமர் போல ஜவ்வாக இழுத்துக்கொண்டே செல்பவர்களுக்கும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. என்றாலும் காலப்போக்கில் இந்த வார்த்தைகளை மக்கள் மறந்து போக, கடந்த 2009ம் ஆண்டில் மீண்டுமாக இந்த ஓகே பூமர் என்ற வார்த்தை பல சமூக வலைதள பக்ககங்களின் கமெண்டுகளில் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. தொடர்ந்து 2019ம் ஆண்டு முதல் தான் இந்த ஓகே பூமர் அங்கிள் என்ற வார்த்தை அதிகளவு உபயோகப்படுத்தப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
அட அதனாலதான் பூமர்னு ஒரு chewing gum வந்ததோ..!? அட இது புதுசா இருக்கே..!! ஆமாங்க அந்த பூமர் uncles-ஐ பெருமைப்படுத்தவே இந்த chewing gum வந்திருக்கு.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2