ஜூன் 7, 2023: இன்று உலக உணவு பாதுகாப்பு தினம்

ஜூன் 7, 2023: இன்று உலக உணவு பாதுகாப்பு தினம்
X

உலக உணவு பாதுகாப்பு தினம் 

உணவுப் பாதுகாப்பு தினம், உணவுப் பாதுகாப்பின் அவசியம் மற்றும் உணவு மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது

உணவுப் பாதுகாப்பின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாப்பற்ற உணவை உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7 ஆம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பும் உணவு மற்றும் விவசாய அமைப்பும் இணைந்து உணவு மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கும், உணவுப் பாதுகாப்பு மற்றும் மனித ஆரோக்கியத்துக்கும் பங்களிக்கும் முயற்சியில் உலக உணவுப் பாதுகாப்பு தினத்தைக் கடைப்பிடிப்பதற்கும் இணைந்து செயல்படுகின்றன .

உலக உணவு பாதுகாப்பு தினம் முதன்முதலில் ஜூன் 7, 2019 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் ஒரு தீர்மானத்தின் மூலம் நிறுவப்பட்ட பின்னர் கொண்டாடப்பட்டது. நெதர்லாந்து முன்மொழியப்பட்ட இதனை 44 நாடுகளால் ஆதரிக்கப்பட்டது.

உலக உணவு பாதுகாப்பு தினத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

  • உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகெங்கிலும் உள்ள 10 பேரில் 1 பேர் ஒவ்வொரு ஆண்டும் உணவு மூலம் பரவும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர், அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் 16,00,000 பேர் பாதுகாப்பற்ற உணவின் காரணமாக நோய்வாய்ப்படுகிறார்கள்.
  • உணவு மூலம் பரவும் நோய் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 4,20,000 பேரின் மரணத்திற்கு வழிவகுக்கிறது என்று ஐநா தரவு சுட்டிக்காட்டுகிறது, குழந்தைகளில் கிட்டத்தட்ட 40% பேர் இதனால் இறக்கின்றனர்.
  • உலக வங்கியின் 2019 அறிக்கை, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 95.2 பில்லியன் டாலர் உற்பத்தித் திறனை உணவு மூலம் பரவும் நோய்கள் ஏற்படுத்துவதாகக் காட்டுகிறது. உணவு மூலம் பரவும் நோய்களுக்கான சிகிச்சைக்கான செலவு ஆண்டுக்கு 15 பில்லியன் டாலர்கள் என்றும் அறிக்கை காட்டுகிறது.
  • உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் கொண்ட பாதுகாப்பற்ற உணவு 200 க்கும் மேற்பட்ட உணவு மூலம் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கிறது. இந்த நோய்களைத் தடுப்பதற்கான வழி, போதுமான சுகாதாரம், கையாளுதல், சேமிப்பு மற்றும் செயலாக்க நடைமுறைகள்.
  • அறுவடை, பதப்படுத்துதல், சேமிப்பு மற்றும் விநியோகம் உட்பட, உணவு தயாரித்து உட்கொள்ளத் தயாராகும் வரை, ஒவ்வொரு கட்டத்திலும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதில் உணவுப் பாதுகாப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.

Tags

Next Story
பவானி அருகே காடையம்பட்டி ஏரியில் பேரிடா் மீட்பு செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி..!