ஆதாரில் மாற்றம் வேண்டுமா? இனிமேல் கட்டண சேவைதான்!
பொதுமக்கள், அந்தந்த மாற்றங்களுக்கு தொடர்பான கட்டணத்தை செலுத்திய பிறகு தான் மாற்றங்களை வெற்றிகரமாக மாற்றம் செய்ய முடியும் என்று UIDAI அறிவித்துள்ளது.
அதாவது, இனி ஆதார் அட்டையில் பெயர் (Name), முகவரி (Address), புகைப்படம் (Photo) என எந்தவொரு தகவலை மாற்றம் செய்ய வேண்டுமென்றாலும், அதற்கென்று தனித்தனி கட்டணங்களை பொதுமக்கள் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை விபரங்களை இனி அப்டேட் செய்ய கட்டணமா?
UIDAI வெளியிட்டுள்ள தகவலின் படி, இனி புதிதாக ஆதார் அட்டைக்காக விண்ணப்பிக்கும் புதிய ஆதார் பயனர்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குழந்தைகளுக்கான பால் ஆதார் அட்டை விபரங்களில் மாற்றங்களை மேற்கொள்ள, எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக 5 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளின் அட்டை அப்டேட்களுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. கடந்த மாதம் 14 ஆம் தேதி வெளியான தகவலின் படி, இந்த மாத இறுதி வரை மட்டுமே இலவச அப்டேட்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
வரும் மே 1, 2024 ஆம் தேதி முதல் ஆதார் அப்டேட் தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த சேவைக்கு என்ன கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விபரங்களும் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
அது குறித்த தகவல் இதோ: ஆதார் அட்டையில் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு அப்டேட்டிற்கும் ஒவ்வொரு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
உதாரணமாக, உங்கள் ஆதார் அட்டையில் உள்ள உங்கள் பெயர் விபரம், பிறந்த தேதி மற்றும் முகவரி விபரங்களை மாற்றம் செய்ய இனிமேல் ஆதார் பயனர்கள் ரூ. 50 கட்டணம் கட்டாயம் செலுத்திட வேண்டும் என்று UIDAI தெரிவித்துள்ளது. இந்த ஆதார் தகவலை மாற்ற ரூ. 100 கட்டாய கட்டணமா?
இது தவிர, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிற்கும் உங்கள் கை ரேகை விபரங்களை அப்டேட் செய்வது, அல்லது உங்கள் கண்ணின் கருவிழி விபரங்களை அப்டேட் செய்வதற்கு இனி ரூ.100 கட்டாய கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தவிர, உங்கள் இ-ஆதார் விபரங்களை, புதிய ஆதார் அட்டையாக வாங்க வேண்டுமென்றால் ரூ. 30 கட்டணம் செலுத்த வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. ஆதார் பயனர்களுக்கு ஆதார் சேவை பற்றிய புரிதலை வழங்க UIDAI வழக்கம் போல சில தெளிவான தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஆதார் அட்டை விபரங்களை மாற்றம் செய்ய, பொதுமக்கள் என்னென்ன ஆவங்ஙளை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற விபரங்களை ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன் படி, உங்களிடம் பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ், பான் அட்டை, ரேசன் அட்டை போன்ற அடையாள ஆவணங்களை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது.
ஆதார் - ஒரு அடையாளம் மட்டுமல்ல
அரசு நலத்திட்டங்கள் முதல், வங்கி கணக்குகள் வரை, தவிர்க்க முடியாத ஆவணமாக மாறிவிட்டது ஆதார். இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்துவமான 12 இலக்க அடையாள எண் வழங்கப்படுகிறது. இந்த ஆதார் எண்ணின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக அதை பல்வேறு முக்கிய ஆவணங்களுடன் இணைப்பது அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படுகிறது. அவற்றுள் பான் கார்டு, வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண் ஆகியவை அடங்கும்.
பான் கார்டுடன் ஆதார் இணைப்பு
அடையாள சான்றாக மட்டுமல்லாமல் நிதிப் பரிவர்த்தனைகளின்போதும் ஆதார் அவசியமாகிறது. குறிப்பாக, வருமான வரி பதிவு செய்யவும், வரி செலுத்தவும் பான் கார்டுடன் ஆதார் இணைக்கப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பைச் செய்யாவிட்டால், உங்கள் பான் கார்டு செயலிழந்து போக வாய்ப்புள்ளது. எனவே, பான் கார்டு உள்ளவர்கள், அதை ஆதாருடன் இணைத்து வைத்திருப்பது முக்கியம்.
வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு
அரசு மானியங்கள் பெரும் ஒரு வழிமுறையாக மாறிவிட்டது ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற பல திட்டங்களின் பயன்கள் உரிய நபருக்கு நேரடியாகச் சென்றடைவதற்கு ஆதார் இணைப்பு அத்தியாவசியமாகிறது. மேலும், வங்கிக் கணக்கின் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் ஆதார் இணைப்பு உதவுகிறது.
செல்போன் இணைப்பு
அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கும், பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கும் செல்போன் எண்ணை ஆதாருடன் இணைப்பது அரசாங்கத்தால் வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு இணைப்பதன் மூலம் போலி சிம் கார்டுகள் பயன்பாட்டைத் தடுப்பதிலும் கள்ளத்தனமாக போன் அழைப்புகளை மேற்கொள்வதைத் தவிர்ப்பதிலும் ஆதார் இணைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆதார் இணைப்பின் நன்மைகள்
அரசு மானியங்களை நேரடியாகப் பெற வழி செய்கிறது.
நிதி மோசடிகளைத் தடுக்கிறது
அடையாள சரிபார்ப்பை எளிதாக்குகிறது
அரசின் பல்வேறு சேவைகளை தடையின்றிப் பெற ஆதரமாக விளங்குகிறது
எப்படி இணைப்பது?
எந்தவொரு சேவையையும் இணையம் மூலம் ஒரு சில கிளிக்குகளில் செய்து முடித்துவிடலாம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆதார் இணைப்பையும் இணையம் மூலம் எளிதாகச் செய்து முடிக்கலாம். வருமான வரித்துறையின் இணையதளத்தில் உங்கள் பான் மற்றும் ஆதார் விபரங்களைப் பதிவிட்டு இணைத்து விட முடியும். இதுபோலவே, வங்கிக் கணக்கு, செல்போன் எண் போன்றவற்றுடனும் ஆதார் எண்ணை இணையம் வழியாகவே இணைத்துக் கொள்ளலாம்.
முக்கியமாக கவனிக்க வேண்டியது
ஆதார், பான் கார்டு, வங்கிக் கணக்கு போன்ற ஆவணங்களில் உள்ள உங்கள் தனிப்பட்ட விபரங்கள் - பெயர், பிறந்த தேதி, போன்றவை - சரியாக இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இவற்றில் ஏதேனும் தவறு இருந்தால், முதலில் அவற்றை சரிசெய்த பின்னரே ஆதார் இணைப்பை மேற்கொள்ளுங்கள். சரியான விபரங்களை பதிவு செய்வதன் மூலம் தேவையற்ற காலதாமதங்களை தவிர்க்கலாம்.
இந்திய குடிமக்களின் அத்தியாவசிய ஆவணமாகி விட்ட ஆதாரை பிற முக்கிய ஆவணங்களுடன் இணைத்து வைத்துக் கொண்டால், அரசு சேவைகளையும் திட்டங்களையும் தடையின்றிப் பெறுவதோடு, அடையாள மோசடிகளில் இருந்தும் உங்களைக் காத்துக் கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu