doodle competition for students-மாணவர்களுக்கு கூகுள் நடத்திய doodle போட்டி..! வெற்றியாளர் படைப்பை doodle-ல் இன்று காணலாம்..!
டூடுல் வடிவமைப்புக்கு வந்திருந்த படைப்புகளில் ஒன்று.
கூகுளுக்கான டூடுல்:
Google Doodle Competition 2022 -கூகுள் நிறுவனம் அறிவித்த போட்டியில் வெற்றியாளருக்கான '2022 டூடுலை' கூகுள் இன்று (14 டிசம்பர் ) அறிவித்தது. கொல்கத்தாவில் வசிக்கும் ஷ்லோக் முகர்ஜி, 'இந்தியா ஆன் தி சென்டர் ஸ்டேஜ்' என்ற ஊக்கமூட்டும் டூடுலை வடிவமைத்ததற்காக வெற்றியாளராகப் அறிவிக்கப்பட்டார். நவம்பர் 14, 2022 அன்று, இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாளான இன்று ஷ்லோக் வடிவமைத்த டூடுல் Google.co.in இல் 24 மணிநேரம் காட்டப்படும்.
"அடுத்த 25 ஆண்டுகளில், மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக என் இந்திய விஞ்ஞானிகள் தங்கள் சொந்த சூழலுக்கான நட்பு ரோபோவை உருவாக்குவார்கள். இந்தியா பூமியிலிருந்து விண்வெளிக்கு வழக்கமான இண்டர்கலெக்டிக் பயணங்களை மேற்கொள்ளும். இந்தியா யோகா மற்றும் ஆயுர்வேதத்தில் மேலும் வளரும், கூடவே வரும் ஆண்டுகளில் இந்தியா வலிமை பெற்ற நாடாக விளங்குவார்கள்." என்று ஷ்லோக் தனது டூடுலைப் பகிரும்போது எழுதினார்.
"அடுத்த 25 ஆண்டுகளில், எனது இந்தியா...." என்ற கருப்பொருளுக்கு பதிலளிக்கும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளிடமிருந்து 1,15000 க்கும் மேற்பட்ட உள்ளீடுகள் போட்டியாளர்களிடம் இருந்து பெறப்பட்டன என்று கூகுள் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நடுவர் குழுவிற்கான இந்த ஆண்டு டூடுலில் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் போன்றோர் தேர்வு செய்யப்பட்டனர். அக்குழுவில் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமையாக விளங்கும் நீனா குப்தா, டிங்கிள் காமிக்ஸ் தலைமை ஆசிரியர், குரியகோஸ் வைசியன்; YouTube கிரியேட்டர்ஸ் Slayypoint கலைஞர் மற்றும் தொழில்முனைவோர் அலிகா பட் ஆகியோர் இருந்தனர். கலைத்திறன், படைப்பாற்றல், போட்டியின் கருப்பொருளுடன் இணைந்த பொருத்தம் மற்றும் அணுகுமுறையின் அசல் தன்மை, புதுமை ஆகியவற்றின் அடிப்படையில் சமர்ப்பிப்புகளில் மதிப்பீடு செய்யப்பட்டன.
அவற்றில் நாடு முழுவதிலும் இருந்து 20 இறுதிப் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பது நடுவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. 20 இறுதிப் போட்டியாளர்களின் டூடுல்களுக்கு ஆன்லைன் வாக்களிப்பு நடத்தப்பட்டது. தேசிய சாம்பியனாக ஷ்லோக் தேர்வு செய்யப்பட்டார். அவருடன் கூடுதலாக நான்கு வெற்றியாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூகுள் அறிவித்துள்ளபடி, ஷ்லோக் தனது பள்ளிக்கட்டணமாக ரூ.500,000 உதவிப்பணமும், கல்லூரி உதவித்தொகைக்கு தொழில்நுட்ப பேக்கேஜாக ரூ.200,000 -யும் வெகுமதியாகப் பெறுவார்.
"மாணவர்கள் தங்கள் உள்ளீடுகளுக்குக் கொண்டு வந்த படைப்பாற்றல் மற்றும் கற்பனைத்திறனைக் கண்டு நாங்கள் வியப்படைந்தோம். மேலும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் மற்றும் அதன் நிலைத்தன்மை ஆகியவை பல டூடுல்களில் பொதுவான கருப்பொருளாக வெளிவருவதை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக நினைக்கிறோம்." என்று கூகுள் டூடுல் பக்கம் கூறியது.
கூகுள் நிறுவனம் 'போட்டிக்கான டூடுல் வடிவமைப்பை இளைஞர்களின் படைப்பாற்றலை வளர்ப்பதற்கும், அவர்களின் புத்திசாலித்தனத்தை முன்னிலைப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu