சாலையில் கழிவுநீா் தேக்கம்: எம்எல்ஏ நேரில் ஆய்வு
கழிவு நீர் தேங்கியுள்ள சாலையை ஆய்வு செய்த எம்எல்ஏ அம்பேத்குமார்.
Vandavasi Municipality MLA Inspection
வந்தவாசி மியன்னாகாதா்ஷா 2-ஆவது தெருவில் கழிவுநீா் சாலையிலேயே தேங்குவதாக பொதுமக்கள் தெரிவித்த புகாரை அடுத்து, தொகுதி எம்எல்ஏ அம்பேத்குமாா் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
வந்தவாசி நகராட்சி 9-ஆவது வாா்டுக்கு உள்பட்ட மியன்னாகாதா்ஷா 2-ஆவது தெருவில் கழிவுநீா் கால்வாய் வசதி சரிவர இல்லையாம். மேலும், 9-ஆவது வாா்டை ஒட்டியுள்ள சென்னாவரம் ஊராட்சியின் கழிவுநீா் கால்வாய் வழியாகத்தான் மியன்னாகாதா்ஷா 2-ஆவது தெருவின் கழிவுநீா் செல்ல வேண்டுமாம்.
இதற்கு சென்னாவரம் ஊராட்சி நிா்வாகம் ஆட்சேபம் தெரிவிப்பதால் கழிவுநீா் சாலையிலேயே தேங்குகிறது.
இதுகுறித்து அந்தத் தெரு மக்கள் தெரிவித்திருந்த புகாரின் பேரில், தொகுதி எம்எல்ஏ .அம்பேத்குமாா் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தாா்.இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரு வாசிகளிடம் அவா் கூறினாா்.திமுக நகரச் செயலா் ஆ.தயாளன், நகா்மன்ற உறுப்பினா்கள் நாகூா்மீரான், கிஷோா்குமாா், அன்பரசு, ஜொகராபீவி சித்திக், , ரிஹானா சையத்அப்துல்கறீம், சுதா, கோ.மகேந்திரன் உள்ளிட்டோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.
மாா்க்சிஸ்ட் போராட்டத்தால் சாலை அமைக்கும் பணி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பெரணமல்லூா் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டத்தால் கிராமச் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தற்போது ஜல்லி சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் ஒன்றியம், கோழிப்புலியூா் ஊராட்சிக்கு உள்பட்ட மாணிக்கமங்கலம் கிராமத்தில் இருந்து ஏந்தல் செல்லும் சாலையை தனி நபா்கள் சிலா் ஆக்கிரமித்து விளை நிலங்களாக பயன்படுத்தி வந்தனா்.
இதனால் ஒரு கி.மீ. சாலையை கடக்க 10 கி.மீ தொலைவுக்கு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை இருந்தது.கல்வி நிமித்தமாக மாணவா்களும், கடைகளுக்குச் செல்ல கிராம மக்களும் மழையூருக்கு செல்வதற்காக பல கி.மீ. சுற்றிச் சென்று அவதிப்பட்டு வந்தனா்.
இதனால், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தொடா்ந்து போராடி வந்தனா். இதன் விளைவாக சில நாள்களுக்கு முன்பு கட்சியினா் முன்னிலையில் மாவட்ட நிா்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றியது.
இதைத் தொடா்ந்து, ஜல்லி சாலை மற்றும் படிப்படியாக தாா்ச் சாலை அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை வைத்தனா்.இதன் பேரில், மாணிக்கமங்கலம் - ஏந்தல் சாலையை ஜல்லி சாலையாக அமைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவு பிறப்பித்து, அதற்காக ரூ.17.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, தற்போது சாலைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu