திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் ஆய்வு
X

புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்

திருவண்ணாமலையில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் வேலு ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை இருந்து திண்டிவனம் ரோட்டில் 25 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட டான் காப் எனப்படுகின்ற எண்ணெய் பிழியும் தொழிற்சாலை இயங்கிய இடத்தில் தற்போது புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வேளாண்மை துறையிடம் இருந்து ஆறு ஏக்கர் நிலம் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதைச் சுற்றியுள்ள நான்கு ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது 6.6 ஏக்கரில் அமைப்பது என்ன முடிவு செய்யப்பட்டு வேலைகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக அப்பகுதியில் உள்ள 60 குடும்பங்களை சேர்ந்த நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பல்லவன் நகருக்கு செல்லும் வழியில் அரசு புறம்போக்கு இடத்தில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டு வீடும் கட்டித் தரப்பட்டுள்ளது.

புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியை அமைச்சர் வேலு ஆய்வு மேற்கொண்டார்.

பேருந்து நிலையத்திற்குள் சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பாலத்தின் கீழ் சுற்றி வந்து தான் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது . இதனால் போக்குவரத்து நெரிசல் கால விரயம் ஏற்படும் என கூறப்பட்ட நிலையில்

அமைச்சர் மற்றும் தலைமை பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் பழனிராஜ் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் பேருந்துகள் எந்தவித கடினமும் இல்லாமல் உள்ளே வரும் வழி மற்றும் வெளியே செல்லும் வழி சர்வீஸ் சாலையை அகலப்படுத்துவது தொடர்பாகவும் அமைச்சர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து ஆய்வு மேற்கொண்டார் .

இதனைத் தொடர்ந்து சர்வீஸ் சாலைக்காக புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அதாவது கடைகளுக்கு முன் பகுதி அகற்றுவது என ஆலோசனைகள் வழங்கப்பட்டது . மேலும் மேம்பாலத்தில் சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு சுலபமாக வரும் வகையில் மேம்பாலத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் சிறு பாலம் ஒன்று கட்டவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது .

தற்போது வேலூர் சாலையில் உள்ள பேருந்து நிலையம் வணிக வளாகம் போல் காட்சி அளிப்பதாலும்,

நடைபாதைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி இருப்பதாலும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் தினமும் திருவண்ணாமலைக்கு கிரிவலம் அண்ணாமலையார் கோவில் ஆசிரமங்களைக் காண வெளி மாநிலங்கள் , வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பொது மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் புதிதாக கட்டும் பேருந்து நிலையம் பொது மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் விசாலமாக அமைக்க வேண்டும் என்ன பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ,மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன், நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story