கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் பெற செயல் விளக்க நிகழ்ச்சி

கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் பெற செயல் விளக்க நிகழ்ச்சி

கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் பெற செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சார்பில் கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் பெற செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சார்பில் தென்இலுப்பை கிராமத்தில் கரும்பு சாகுபடியில் கரும்பு விவசாயிகள் அதிக மகசூல் பெற நவீன தொழில்நுட்பத்தை மேற்கொள்ள கரும்பு வயலில் செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு கூடுதல் சர்க்கரை துறை இயக்குனர் வீ.தேவகி தலைமை தாங்கினார். ஆலையின் மேலாண்மை இயக்குனர் காமாட்சி முன்னிலை வகித்தார். இதில் இப்போ நிறுவனத்தின் கள மேலாளர் பி. ஆனந்தன் நவீன தொழில்நுட்ப முறையில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் முறையை செயல்விளக்கம் செய்து காண்பித்தார். கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மைய பேராசிரியர் நாராயணன் வனவிலங்கு, பூச்சி தாக்குதலில் இருந்து கரும்பை பாதுகாக்கும் முறையை விரிவாக எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயன் பெற்றனர். முடிவில் ஆலையின் கரும்பு பெருக்க அலுவலர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

Read MoreRead Less
Next Story