Heavy Rain Arani River Full ஆரணி ஆற்றில் மழை நீர் கரை புரண்டு ரோடுகளில் ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு

Heavy Rain Arani River Full   ஆரணி ஆற்றில் மழை நீர் கரை புரண்டு  ரோடுகளில்  ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு
X

ஆரணி ஆற்றில்  தண்ணீர் கரைபுரண்டோடுவதால் ரோடுகளில்  பரவிய மழைநீர். 

Heavy Rain Arani River Full புயல் காரணமாக பிச்சாட்டூர் அணையில் இருந்து சமீபத்தில் திறந்து விடப்பட்ட தண்ணீர் ஆரணி ஆற்றில் கரைபுரண்டு சாலை விளைநிலங்களில் வாழ்வதால் போக்குவரத்து, மற்றும் பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளது.

Heavy Rain Arani River Full

பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணி ஆற்றில் உபரி நீர் திறப்பால்வெள்ளம் கரை புரண்டு சாலையில் ஓடுவதால் ஏக்கருக்கும் மேற்பட்ட விலை நிலங்கள் மற்றும் மல்லி, ரோஜா, கீரை பயிர் பாதிப்பு அடைந்துள்ளது.திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, ஆரணி, உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சமீபத்தில் வடகிழக்கு பருவமழை காரணத்தினால் திருவள்ளூர் மாவட்டத்திலும் அருகில் உள்ள ஆந்திராவிலும் பரவலாக மழை பெய்து வருவதால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் பகுதியில் உள்ள ஏரி நிரம்பியதால் அணையின் நீர்மட்டம் கிடு, கிடு என உயர்ந்த நிலையில் அணையின் நலனை கருதி பிச்சாட்டூர் அணையில் இருந்து 3200 கன அடி உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் ஊத்துக்கோட்டை அருகே சுருட்ட பள்ளி, போந்தவாக்கம் வழியாக பாலவாக்கம், கல்பட்டு, ஆவாஜி பேட்டை, மேல் மாளிகைபட்டு, கீழ் மாளிகை பட்டு, பெரியபாளையம், மங்கலம், காரணி, புதுப்பாளையம், புது வாயில் வழியாக பொன்னேரி பல்வேறு காடு கடலில் சென்று சேர்கிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் சேர்ந்து கனமழை பெய்ததால் ஆரணி ஆற்றில் திறந்து விடப்பட்ட பிச்சாட்டூர் நீர் மற்றும் மழைநீர் ஆனது மேற்கண்ட கிராமங்களில் வழியாக ஆரணி ஆற்று கரை அருகே உள்ள ஆயிரக்கணக்கான விலை நிலங்களில் தண்ணீர் புகுந்து விவசாயிகள் பயிரிட்ட மல்லி,ரோஜா, முல்லை, வெண்டை, கத்திரி, முள்ளங்கி உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் 300-க்கும் மேற்பட்ட பயிர்களும் நீரில் மூழ்கி சேதம் அடைந்தது. இது மட்டுமல்லாமல் பெரியபாளையம் அருகே புதுப்பாளையம்,காரணி இடையே ஆரணி ஆற்றில் மக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்த தரைப்பாலம் மீது சுமார் நான்கடிக்கும் மேலாகவே தண்ணீர் செல்வதால்10.க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதனால் புதுப்பாளையம், காரணி, மங்கலம், எருக்கு வாய், நெல்வாய் உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கடந்த 3.நாட்களாக பெரியபாளையம், ஆரணி, கும்மிடிப்பூண்டி, கன்னிகைப்பேர், தண்டலம், சூளைமேனி, பாலவாக்கம், வடமதுரை, எனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மின்சாரம் இல்லாமல் கிராமங்களில் பல பகுதிகள் மழை நீர் சூழ்ந்து மழைநீரில் விஷ ஜந்துக்களும் வீட்டுக்குள் வருவதாகவும், பருகுவதற்கு கூட குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் வெளியே வர முடியாத நிலையில் தத்தளித்து வருவதாக தெரிவித்தனர். எனவே அதிகாரிகள் உடனடியாக தாங்கள் பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Tags

Next Story