ஈரோட்டின் வரலாறு இணையத்தில்: 400 ஆண்டு ஓலைச்சுவடிகள் ஆன்லைனில் விரைவில்!

ஈரோட்டின் வரலாறு இணையத்தில்: 400 ஆண்டு ஓலைச்சுவடிகள் ஆன்லைனில் விரைவில்!
ஈரோடு – ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள 400 ஆண்டுகள் பழமையான 179 ஓலைச்சுவடிகள் இப்போது டிஜிட்டல் வடிவில் புதிய உயிர் பெற உள்ளன. தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் எழுதப்பட்டுள்ள இந்த ஓலைச்சுவடிகள், அக்கால சமூக வாழ்க்கை, மரபுகள், மொழி வளர்ச்சி மற்றும் சட்டநூல்கள் ஆகியவற்றின் முக்கிய சான்றுகளாக விளங்குகின்றன. இவை பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் தற்போது டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்படுகின்றன.
தற்போது, இந்த அரிய ஆவணங்கள் புகைப்படமாக எடுக்கப்பட்டு, அதில் உள்ள எழுத்துக்கள் கணினியில் பதிவு செய்யப்படும் பணிகள் தீவிரமாக தொடங்கியுள்ளன. இந்த முழு பணிக்கு சுமார் 5 மாதங்கள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பின் இந்த ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு, அனைவரும் இலவசமாக அணுகக்கூடிய வகையில் அமையவுள்ளன.
இந்த டிஜிட்டல் மயமாக்கல் முயற்சி மூலம், தமிழ் மரபுச்சான்றுகள் மற்றும் தொன்மை வாய்ந்த எழுத்து ஆவணங்கள் காலத்தால் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதே, இளைஞர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு அறிவு வளமாகவும் மாறும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu