3 Days Power Cut Public Agitation மூன்று நாட்களாக மின்சாரம் நிறுத்தம் நடவடிக்கை கோரி பொது மக்கள் போராட்டம்

3 Days Power Cut Public Agitation  மூன்று நாட்களாக மின்சாரம் நிறுத்தம்  நடவடிக்கை கோரி பொது மக்கள் போராட்டம்
X

மின் இணைப்பு உடனே வழங்க கோரி சாலை மறியல் போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

3 Days Power Cut Public Agitation புழல் காரணமாக 3 நாட்களாக மின்சாரம் வழங்கப்படாததை உடனடியாக மின்சாரம் வழங்க வலியுறுத்தி புதுவள்ளூர் பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பானது.

3 Days Power Cut Public Agitation

பாப்பரம்பாக்கம் அருகே புதுவள்ளூர் பகுதியில் மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் குடிநீர் இல்லாததல் உடனடியாக மின்சாரம் வழங்க கோரி அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அரண்வாயல் பகுதியில் இருந்து ஸ்ரீ பெருமந்தூர் செல்லும் சாலையில் மறியல் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், பாப்பரம்பாக்கம் அருகே புதுவள்ளூர் கிராமத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சமீபத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் அப்பகுதியில் குடி தண்ணீர் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்படைந்து வருகின்றனர். நேற்று இரவு முதல் மழை நின்ற பின்பும் இதுவரை அப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்காததால் பலமுறை மின்வாரியத்திற்கு தகவல் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் ஆத்திரம் அடைந்த புதுவள்ளூர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அரன்வாயல் பகுதியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் புதுவள்ளூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணவாளநகர் காவல் துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நிற்பதாலும் மின் இணைப்பு தருவதில் தாமதம் ஏற்படுவதாகவும் உடனடியாக அதனை சீர் செய்து அப்பகுதியில் மின் இணைப்பு தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் உறுதி அளித்த பின்பு மறியலை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.மேலும் தங்கள் பகுதிக்கு மின் இணைப்பு தராத பட்சத்தில் அனைவரும் சேர்ந்து நாளை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Tags

Next Story