மக்களை செழுமை கோட்டை நோக்கி நகர்த்துவதே லட்சியம்: அவிநாசியில் கமல்
தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வேனில் இருந்தபடியே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
இது கட்சிகளுக்கு இடையேயான போர் அல்ல, ஊழலுக்கும் நேர்மைக்கும் இடையேயான போர். இதில் உங்கள் வாக்கு நேர்மையின் பக்கமே இருக்க வேண்டும் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. முதலையுண்ட பாலகனை சுந்தரர் பதிகம் பாடி மீட்டார் என்பது கேட்டிருக்கிறோம். இன்று தமிழகத்தை விழுங்கிக் கொண்டிருக்கும் பண முதலைகளை பாடி எல்லாம் தமிழகத்தை மீட்க முடியாது இந்த பண முதலைகள் வாயிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் அதில் உங்கள் உதவியும் தேவை உங்கள் ஓட்டும் தேவை. முதல் முறையாக ஓட்டு போடுபவர்கள் கரை படியாத உள்ளம் கொண்டவர்கள் இவர்கள் சாதிப்படி ஓட்டு போடாமல், சாதிப்பதற்கு ஓட்டுப்போடுங்கள் என்று கூறியவர். இது இளைஞர்களுக்கு மட்டுமல்ல முதியவர்களுக்கு தாய்மார்களுக்கு அனைவருக்கும் பொருந்தும். ஏழையை ஏழையாக வைத்து இருந்தால் மட்டும்தான் தேர்தலின் போது அவர்களை குத்தகைக்கு எடுக்க முடியும் அதனால் தான் அவர்கள் ஏழ்மையை பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். வறுமை கோடு என்று அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் நாங்கள் சொல்வது செழுமை கோடு உங்களை செழுமை கோட்டை நோக்கி நகர்த்துவதும் அதற்கும் மேலே கொண்டு போவதும் தான் மக்கள் நீதி மையத்தின் கனவு திட்டம். பக்கத்து மாநிலத்தவர் பொறாமைப்படும் அளவிற்கு தமிழகத்தில் மழை பெய்கிறது ஆனால் குடிக்க தமிழகத்தின் தண்ணீர் இல்லை . இதற்கு காரணம் நீர் மேலாண்மை தெரிந்த தமிழர்கள் பணம் வசூல் வேட்டையில் இறங்கி விட்டார்கள் நம் பெருமையெல்லாம் சீரழிந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu