/* */

நெல்லையில் சிறுபான்மையினர்களுக்கான நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு கூட்டம்

சிறுபான்மையினர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

நெல்லையில் சிறுபான்மையினர்களுக்கான நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு கூட்டம்
X

நெல்லையில் சிறுபான்மையினர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்டம் சிறுபான்மையினர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் சிறுபான்மையினர் நல இயக்குநர் சுரேஷ்குமார் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு முன்னிலையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சிறுபான்மையினர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் சிறுபான்மையினர் நல இயக்குநர் சுரேஷ்குமார் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு முன்னிலையில் நடைபெற்றது.

சிறுபான்மையினர் நல இயக்குநர் சுரேஷ்குமார் பேசியதாவது:- திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சிறுபான்மையினருக்காக வழங்கப்படும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை மேலும் அனைவருக்கும் சென்று சேர்க்கும் வகையில் பணியாற்ற வேண்டும். முஸ்லிம் மற்றும் கிறுஸ்துவ மகளிர் சங்கங்கள், தங்களது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். சிறுபான்மையினர் வழிபடும் தளங்களில் (மசூதி, சர்ச்) வளாகங்களில் அரசு சிறுபான்மையினர் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விளம்பர பலகை அல்லது பதாகைகள் நிறுவ வேண்டும். உலமாக்கள் முறையாக பதிவு செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா நல அலுவலகம் அல்லது பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கக மின்னஞ்சல் முகவரி dir.bcmw@nic.in மற்றும் தொலைபேசி எண் 044-29515942 மூலம் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தை அணுகலாம் என தெரிவித்தார். மேலும் உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியம் மூலம் 8 உலமாக்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை சிறுபான்மையினர் நல இயக்குநர் சுரேஷ்குமார் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு முன்னிலையில் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர்கள், கு.உஷா, (திருநெல்வேலி) குனசேகர் (தென்காசி) கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி, மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் சுபாஷினி, அனைத்து கல்வி அலுவலர்கள், மற்றும் கிறிஸ்துவ முஸ்லீம் மகளிர் உதவும் சங்க உறுப்பினர்கள், மாவட்ட அரசு காஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Dec 2021 1:35 PM GMT

Related News