/* */

கொரோனா தொற்று இறந்த மூவர் உடல் அடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்- நெல்லை மாவட்ட தன்னார்வலர்கள்...

மக்கள் பணியில் மகத்தானவர்கள்.

HIGHLIGHTS

கொரோனா தொற்று  இறந்த மூவர் உடல் அடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்- நெல்லை மாவட்ட தன்னார்வலர்கள்...
X

பாப்புலர் ஃப்ரண்ட்-நெல்லை மாவட்ட தன்னார்வலர்கள் கொரோனா தொற்றினால் இறந்த மூவர் உடலை நல்லடக்கம் செய்தனர்.

நெல்லையில் கொரோனா தொற்றினால் பாதிப்படைபவர்கள் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்றைய இறப்பு மூன்று பேராகும் தொடர்ச்சியாக கொரோனா தொற்றினால் இறந்தவர்களை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நல்லடக்கம் செய்யும் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வலர்கள் செய்து வருகின்றனர். நெல்லையில் பல குழுக்களாக பிரிந்து மக்களுக்கு தேவையான அவசர மருத்துவ உதவிகளையும் செய்து வருகின்றனர்.இந்நிலையில் மேலப்பாளையத்தை சார்ந்த 70 வயது பெண், பேட்டையை சார்ந்த ஒருவர் பத்தமடையை சார்ந்த 72வயது ஆண் என மூவர் கொரோனா தொற்றினால் இறந்த நிலையில் அவர்களின் உறவினர்கள் எஸ்டிபிஐ கட்சி நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் அவர்களை தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளனர் இதையடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நெல்லை மாவட்ட தன்னார்வ குழுவினர் இறந்த வர்களின் உடலை பெற்று பத்தமடை, மேலப்பாளையம், பேட்டை அடக்க ஸ்தலத்தில்

அவரவர்‌ மதப்பிரகாரம் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்தனர்.

இந்த குழுவினர் இரண்டாம் ‌அலையில் இன்று வரை 45 உடல்களை இறந்தவரின் மதப்படி தகனம் மற்றும் நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது பாரட்டுதலுக்கு உரியது.


Updated On: 9 May 2021 5:45 AM GMT

Related News