Begin typing your search above and press return to search.
அண்ணா பிறந்த நாள்: நெல்லையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
நெல்லையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை-கணேசராஜா சார்பில் மாலை அணிவித்து மரியாதை.
HIGHLIGHTS
பேரறிஞர் அண்ணா 113 வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பு மேம்பாலம் அருகே உள்ள அவரின் திருஉருவ சிலைக்கு மாவட்ட அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நெல்லை அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது முன்னால் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, நெல்லை மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ஜான்சிராணி, வட்ட செயலாளர் GP மணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.