/* */

திருச்சி பொன்மலை சதர்ன் ரயில்வே பென்சனர்கள் சங்க மாதாந்திர கூட்டம்

திருச்சி பொன்மலை சதர்ன் ரயில்வே பென்சனர்கள் சங்கத்தின் மாதாந்திர கூட்டத்தில் கணேஷ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

HIGHLIGHTS

திருச்சி பொன்மலை சதர்ன் ரயில்வே பென்சனர்கள் சங்க மாதாந்திர கூட்டம்
X
திருச்சி பொன்மலை சதர்ன் ரயில்வே பென்சனர்ஸ் சங்க மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

திருச்சி பொன்மலை சதர்ன் ரயில்வே பென்சனர்கள் சங்கத்தின் மாதாந்திர கூட்டம், பொன்மலைப்பட்டி சங்க அலுவலகத்தில் நடந்தது. பெரும்பான்மையான செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். செயல் தலைவர் கணேஷ் தலைமை ஏற்றார்.

கூட்டத்தின் துவக்கத்தில், பொன்மலை, சதர்ன் ரயில்வே பென்சனர்கள் சங்கத்தின் சமீபத்தில் மறைந்த முன்னாள் தலைவர் கோபாலன் படத்திறப்பு மற்றும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

மேலும் முன்னாள் தலைவர் மறைந்த கோபாலனின் சேவை மனப்பான்மை, ஆளுமைத்திறன் மற்றும் உபசரிக்கும் பண்பு பற்றி செயல் தலைவர். செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் புகழ் அஞ்சலி செலுத்தி பேசினார்கள்.

தொடர்ந்து மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. செயலாளர் தனது உரையில், சங்கத்திற்கு தலைவர் அவசியம் என்றும், தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும், ஆகவே செயல் தலைவர் கணேஷ் அவர்களை தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்தார். செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் செயலாளரின் கருத்தை ஆமோதித்து இசைவு அளித்தார்கள்.

பொருளாளர் மகேந்திரன் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாதாந்திர மருத்துவ உதவித் தொகை, எந்த நிபந்தனையும் இல்லாமல் அனைவருக்கும் வழங்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், அக்டோபர் மாத வரவு செலவு கணக்கை வாசித்தார். அதனை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டார்கள்.

முன்னாள் தலைவர் கோபாலன் தன் இறுதி காலத்தில் சென்னையில், தனது மகன் வீட்டில் தங்கி மருத்துவம் பெற்று வந்தார். அவர் காலமானதையடுத்து இறுதி சடங்குகள் சென்னையிலேயே நடைபெற்றது. சங்கத்தின் சார்பாக பழனிவேல் நேரில் சென்று மறைந்த தலைவர் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். இதனை நினைவு கூறும் வகையில் பழனிவேலிற்கு சங்க செயலாளர் பாராட்டும். நன்றியும் தெரிவித்தார். உதவி செயலாளர் ரவிச்சந்திரன் அவர்கள் நன்றியுரை கூற கூட்டம் நிறைவு பெற்றது.

Updated On: 7 Dec 2022 10:57 AM GMT

Related News