/* */

29 கோடியில் அறிவியல் தொழில் நுட்ப பூங்கா, அடிக்கல் நாட்டிய அமைச்சர் கீதா ஜீவன்

தூத்துக்குடியில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் அறிவியல் தொழில் நுட்ப பூங்கா பணிகளை அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

29 கோடியில் அறிவியல் தொழில் நுட்ப பூங்கா, அடிக்கல் நாட்டிய அமைச்சர் கீதா ஜீவன்
X

29 கோடியில் அறிவியல் தொழில் நுட்ப பூங்கா, அடிக்கல் நாட்டி அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.

இந்திய தொழில்நுட்ப கூட்டமிப்பின் ஆய்வுப்படி மனித வள மேம்பாடு குறியீட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி இரண்டாவது இடத்தில் உள்ளது.

தற்போது சீர்மிகு நகரத்துட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், மற்றும் கணித பூங்கா (STEM PARK) மற்றும் சிட்டி லேர்னிங் சென்டர் ஆகியவை தூத்துக்குடி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் அமைக்கபடுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் 9 ஏக்கர் பரப்பளவில் சுமார் 29 கோடி செலவில் அமைக்கபட உள்ளது.

இந்த பூங்காவில் மினி திரையரங்கம், அறிவியல் மண்டலம், ஆற்றல் மண்டலம், கணித மண்டலம், பொறியியல் மற்றும் பொருள் அறிவியல், விண்வெளி மண்டலம், பரிணாம மாதிரிகள் உட்புற கண்காட்சிகள், ஒரு கோளத்தில் அறிவியல் மெய்நிகர் கண்காட்சி கூடம், கண்டு பிடிப்பு மையம் உள்ளிட்டவைகள் அமைக்கபட உள்ளது.

இந்த நவீன வசதிகளுடன் கூடிய பூங்கா அனைத்து வயதினருக்கும் உயர் கல்வி மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் முக்கிய சுற்றுலாதளமாகவும் அமையும்.

ஆங்கிடையன் நிறுவனம் இந்த பூங்காவின் கட்டுமான பணிகளை ஒரு வருடத்திற்குள் முடித்து தருவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு நவீன அறிவியல் தொழில் நுட்ப பூங்காவின் அடிகல் நாட்டி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, திமுக மாநக செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Sep 2021 12:08 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!