/* */

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில்  செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி
X

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் பயனாளிகளுக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டது.

உலக மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு செயற்கை கால்களை திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிவிக்கும்போது தற்போது கொரோனா மூன்றாவது அலை ஏதாவது வருவதாக இருந்தாலும் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே எப்படிப்பட்ட அலைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளக்கூடிய முன்னேற்பாடு பணிகளை எடுக்கப்பட்டுள்ளன என்றார். மேலும் மாற்றுத்திறனாளிகள் எவரேனும் இருந்தாலும் அவர்களுக்கும் செயற்கை கால் வழங்கும் நிகழ்வை அனைவருக்கும் தெரிவித்து அனைவரும் பயன் பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு துறை பேராசிரியர் திருச்செல்வி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, நிலைய மருத்துவ அதிகாரி ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Nov 2021 1:28 PM GMT

Related News