டில்லி மதுபான ஊழலில் உண்மையான பிரச்னை என்ன?

டில்லி மதுபான ஊழலில்  உண்மையான பிரச்னை என்ன?
X

டில்லி அரசின் மதுபான கொள்கை (கோப்பு படம்)

டெல்லி முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஏன் கைது செய்யப்பட்டனர்?

அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருவாயைத் துறந்து, அவற்றைத் தங்களுக்குத் தாங்களே மாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். இப்படியெல்லாம் நடக்கும் என்று நம்ப முடியவில்லை.

டெல்லியின் பழைய மதுபானக் கொள்கை என்னவென்று பார்க்கலாம்.

750ML மொத்த விற்பனை விலை ₹166.73

கலால் வரி ₹223.88

VAT ₹106.00

சில்லறை விற்பனையாளர் கமிஷன் ₹ 33.39

MRP ₹530.00

கெஜ்ரிவாலின் புதிய மதுபானக் கொள்கை மார்ச் 2022ல் அமல்படுத்தப்பட்டது

அதன்படி 750ML மொத்த விற்பனை விலை ₹188.41

கலால் வரி ₹ 1.88

VAT 1% ₹ 1.90

சில்லறை விற்பனையாளர் வரம்பு ₹ 363.27

கூடுதல் கலால் ₹ 4.54

MRP ₹560.00

இதனால், பழைய மதுபானக் கொள்கையில், ஒரு பாட்டிலில் அரசின் வருவாய் = 329.89, புதிய மதுக் கொள்கையில் 8.32 மட்டுமே.அதாவது, புதிய பாலிசியால், அரசுக்கு ஒரு பாட்டிலுக்கு ₹ 321.57 நஷ்டம். பழைய பாலிசியில், சில்லரை விற்பனையாளரின் கமிஷன் 33.39 ஆனால் புதிய பாலிசியில் சில்லறை விற்பனையாளரின் கமிஷன் சில மாதங்களுக்கு ரூ 363.27 ஆக இருந்தது. அதாவது சில்லறை விற்பனையாளருக்கு ஒரு பாட்டிலுக்கு ₹330.12 லாபம்.

இங்கு பார்த்தால், ஒரு பாட்டிலுக்கு அரசாங்கம் எவ்வளவு நஷ்டப்படுகிறதோ, அதே அளவு சில்லறை விற்பனையாளரும் பலன் அடைகிறார் என்பது தெளிவாகிறது.தவிர விதிகளை மீறி உற்பத்தியாளரே, சில்லறை கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டது. விதிகளை மீறி குடிக்கும் வயது 21ல் இருந்து 18 க்கு குறைக்கப்பட்டது.

விதிகளை மீறி விடியற்காலம் மூன்று மணி வரை கடைகள் திறக்கப்பட்டன. இதன் விளைவு பழைய பாலிசியில் மாதந்தோறும் விற்பனை 132 லட்சம் லிட்டர் ஆக இருந்தது. புதிய பாலிசியில் மாதாந்திர விற்பனை 245 லட்சம் லிட்டர் ஆக அதிகரித்து விட்டது. அரசாங்க பணம் சுரண்டப்பட்டது எவ்வளவு என்று நீங்களே கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த சிக்கல்களால் தான் முன்பு டில்லி துணை முதல்வர் கைது செய்யப்பட்டார். இப்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதாகி உள்ளார். இவ்வளவு பகிரங்கமாக ஊழல் செய்த முதல்வரை எப்படி மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அரசுக்கு இத்தனை கோடி இழப்பு ஏற்படுத்தினால் மத்திய அரசு விசாரிக்காமல் என்ன தான் செய்யும். வேடிக்கை பார்க்க வேண்டும் என நினைக்கிறீர்களா?

Tags

Next Story
காசநோய், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு: ஈரோட்டில் விழிப்புணர்வு முகாம்