தேனி தொகுதியில் நேரடியாக களம் இறங்கியது தி.மு.க.,
Theni Constituency DMK Contest
தேனி லோக்சபா தொகுதியில் பா.ஜ.க., கூட்டணி சார்பில் டி.டி.வி., தினகரன் களம் இறங்குவது உறுதியாகி உள்ளது. மார்ச் 20ம் தேதி இதற்கான வேட்புமனுவை டி.டி.வி., தாக்கல் செய்வார் என எதிர்பார்த்த நிலையில், பிரதமர் மோடியின் சேலம் வருகை காரணமாக டி.டி.வி., மனுதாக்கல் தேதி 24ம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து பட்டியல் வெளியாகி உள்ளது. இதன்படி தேனி தொகுதியில் தி.மு.க., நேரடியாக களம் இறங்குகிறது. அக்கட்சி சார்பில் தங்க.தமிழ்செல்வன், செல்வேந்திரன், இம்ரான் (முன்னாள் எம்.பி., ஆருண் மகன்) ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. மூவரும் பலம் வாய்ந்த வேட்பாளர்கள் என்பதால் யார் நின்றாலும் சரி என்ற மனநிலையில் தான் தேனி தொகுதி கட்சியினர் உள்ளனர்.
இந்நிலையில் அ.தி.மு.க.,வும் நேரடியாக களம் இறங்கும் என்ற பேச்சு அடிபடுகிறது. அக்கட்சி சார்பில் இரண்டு பேரின் பெயர்கள் அடிபடுகின்றன. இருவரும் வலுவான வேட்பாளர்கள் தான். இதற்கிடையில் அ.தி.மு.க., தனது கூட்டணி கட்சிக்கும் ஒதுக்க வாய்ப்புள்ளது என்ற பேச்சும் அடிபடுகிறது. ஒரிரு நாளில் இந்த புதிர்களுக்கும் விடை கிடைத்து விடும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu