இந்து பண்டிகைகளை தேர்தலை காரணம் காட்டி முடக்கக் கூடாது; இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை
தேனியில் இந்து எழுச்சி முன்னணி வாரவழிபாட்டு கூட்டம் நடந்தது.
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி தலைமை காரியாலயத்தில் வார வழிபாடு நடைபெற்றது. தேனி நகர துணைத்தலைவர் எஸ்.நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ரத்தினம் முன்னிலை வகித்தார். நிறுவனத்தலைவர் ரவி வழிநடத்தினார். உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தல் தேச பக்தர்களுக்கும் தேச விரோத சக்திகளுக்கும் நடக்கும் இறுதி யுத்தம் என்பதாலும் இந்த தேர்தல் முடிவுகளும் அதன் பயனாக அமையும் ஆட்சியின் மூலமாக மட்டுமே அகண்ட பாரதமும் பூரண இந்து ராஷ்டிரமும் அமைக்க முடியும் என்பதால் பக்தி நிரம்பிய தமிழக மக்கள் வாக்குச்சீட்டு என்ற சக்தியின் மூலமாக பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரைக்கு தங்களது வாக்குகளை செலுத்தி தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிரூபிக்க வேண்டுமென தமிழக வாக்காளர்களை தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.
தமிழக தேர்தல் ஆணையம் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாத சிறப்பு நிகழ்வுகளில் அரசியல் கட்சியினர் கலந்து கொள்ளலாம். ஆனால் அரசியல் பேசக்கூடாது என சொல்லி இருப்பது வரவேற்ககூடியது. அதேபோல இது இந்துக்களின் பண்டிகை மாதம் என்பதால் இந்து திருவிழாக்களை தேர்தல் காரணம் காட்டி முடக்க நினைக்கக் கூடாது எனவும் தேர்தல் ஆணையத்தை தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் எப்போதும் இல்லாத வகையில் அதிகமாக உள்ளதாலும் வயதானவர்கள் நோயாளிகள் சிறுவர் சிறுமிகள் போன்றோர்கள் பொது வெளியில் பயணிக்கும் போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதால் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நிழற்குடைகள் அதிக அளவில் அமைப்பதோடு தாகம் தீர்க்கும் வகையில் நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டுமாய் மாவட்ட நிர்வாகத்தையும் நகராட்சி நிர்வாகத்தையும் இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu