தி.மு.க.,வின் எதிர்ப்பு ஓட்டுகள் பா.ஜ.க.,விற்கு மாறுகிறதா?

தி.மு.க.,வின் எதிர்ப்பு ஓட்டுகள்  பா.ஜ.க.,விற்கு மாறுகிறதா?
X
Dmk Opposite Vote To Bjp பிரதமர் மோடியின் தமிழக பயணமும் மக்களிடம் அதற்கு பெருகி வரும் ஆதரவும், தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் பா.ஜ.க.,விற்கு மாறும் என தெரிகிறது.

Dmk Opposite Vote To Bjp

தமிழகத்தில் எப்போதுமே தி.மு.க.,வின் எதிர்ப்பு ஓட்டுகள் என்ற ஒரு ஓட்டு வங்கி உள்ளது. தி.மு.க., ஓட்டுகள் வலுவாக இருப்பதை போன்றே எதிர்ப்பு ஓட்டுகளும் வலுவாக உள்ளது. வெளிப்படையாக கூறினால் தி.மு.க.,வின் எதிர்ப்பு ஓட்டுகளால் தான் எம்.ஜி.ஆரும்., ஜெயலலிதாவும் தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தனர்.

இப்போது அ.தி.மு.க., நொறுங்கி கிடக்கிறது. தவிர தற்போது அ.தி.மு.க.,வில் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் செல்வாக்கு குறைந்த, கட்சியினர் செல்வாக்கும் குறைந்த ஒரு தலைவராக இருக்கிறார். வெளிப்படையான உண்மை இரட்டை இலை சின்னம் மட்டுமே இப்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையை காப்பாற்றி வருகிறது. இதனால் தான் ஓ.பி.எஸ்., இரட்டை இலை சின்னத்தை முடக்க படாதபாடு பட்டு வருகிறார். இரட்டை இலை முடங்கி விட்டால் அ.தி.மு.க., அதோகதி தான்.

இப்போதைய நிலையில் தி.மு.க.,விற்கு மாற்று சக்தியாக தமிழகத்தில் பா.ஜ.க., வலுவாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக மோடி பிரதமர் வேட்பாளர் என்ற வாசகம் அக்கட்சிக்கு ஆயிரம் யானை பலத்தை கொடுத்துள்ளது. பா.ஜ.க.,வின் தமிழக தலைவர் அண்ணாமலை கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர்., ஜெ.,க்கு ஈடாக மக்கள் மனங்களை கவர்ந்து விட்டார். இந்த இரண்டு பலங்களும் சேர்ந்து தி.மு.க.,விற்கு தமிழகத்தில் மாற்று சக்தி பா.ஜ.க., மட்டுமே என்ற நிலையை உருவாக்கி விட்டது. உண்மையும் அது தான். எனவே தி.மு.க.,வின் எதிர்ப்பு ஒட்டுகள், நடுநிலை ஓட்டுகள், தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் ஓட்டுகள் என அத்தனையும் பா.ஜ.க.,வை நோக்கி மாறும் என அத்தனை அரசியல் விமர்சகர்களும் கூறி வருகின்றனர். காரணம் இது பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல். எனவே பா.ஜ.க., தி.மு.க.,வின் எதிர்ப்பு ஓட்டுகளை எளிதில் அறுவடை செய்து விடும்.

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திற்கு மட்டுமே வாக்களிக்கும் 20% வாக்குகள் உள்ளன. அவர்கள் வேறு எந்த கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள்.

அரசியல் விமர்சகர்கள் ஒரு கணக்கு சொல்கிறார்கள். அதாவது திமுகவுக்கும் 20% வாக்குகள் நிலையாக உள்ளது. உதய சூரியன் சின்னமும் உள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு வாக்களிக்காத 15% ஓட்டுகள் உள்ளன. இவர்கள் தி.மு.க., அல்லது அ.தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் எனக்கூட வைத்துக் கொள்ளலாம். இந்த ஓட்டுகள் பா.ஜ.க., பக்கம் சாயும் என உறுதியாக கூறுகின்றனர். இவர்களை கவர்ந்து இழுக்கும் காந்தசக்தி மோடியும், அண்ணாமலையும் மட்டுமே. தவிர பா.ஜ.க.,வுக்கு என உள்ள அபரிமிதமான ஓட்டு வங்கி, PMK, TMC, OPS பிரிவு, DMDK போன்றவற்றுடன் சேர்ந்து, அவர்கள் அனைவரும் சேர்ந்து 15% முதல் 20% சதவீதம் வாக்குகளை பெறலாம். மீதமுள்ள 30% முதல் 35% வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் திமுக கூட்டணிக்கு தான் செல்லும். எப்படி பார்த்தாலும் இன்றைய நிலையில் தி.மு.க., கூட்டணியின் கையே ஓங்கி உள்ளது. ஆனால் 40 தொகுதிகளையும் கைப்பற்றும் அளவுக்கு இல்லை. தி.மு.க., அதிக தொகுதிகளை பெறும், இரண்டாவது இடத்தை பா.ஜ.க., கூட்டணி பெற்று விடும் என்ற நிலை தான் காணப்படும். பாவம் எடப்பாடியின் அ.தி.மு.க., தான் என்ன செய்யப்போகிறது என தெரியவில்லை. இந்த கணக்கு எண்களை அடிப்படையாக கொண்டது. இதனை தாண்டி அரசியல் அலை என்ற ஒன்று உள்ளது. அதனையும் கவனிக்க வேண்டும். இந்தியா முழுவதும் பெரும் அளவில் கொடிகட்டிப்பறக்கும் மோடி அலை தமிழகத்திலும் முந்தப்போகிறதா? அல்லது ராகுல் காந்தி என்ற அலை முந்தப்போகிறதா? என தெரியவில்லை. காரணம் இந்திய அரசியல் களத்தின் முகம் வேறு. தமிழக அரசியல் களத்தின் முகம் வேறு. எனவே சற்று கவனமாக தான் கணக்கிட முடியும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
காசநோய், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு: ஈரோட்டில் விழிப்புணர்வு முகாம்