/* */

தஞ்சையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, பாதாள சாக்கடை தூய்மை பணியில் ஊழியர்

தஞ்சையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, பாதாள சாக்கடையை தூய்மை செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டது. அதிர்ச்சியை ஏற்படுததியது.

HIGHLIGHTS

தஞ்சையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, பாதாள சாக்கடை தூய்மை பணியில்  ஊழியர்
X

தஞ்சாவூரில் பாதாள சாக்கடையில் பாதுகாப்பு , உபகரணங்கள் இன்றி, தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட ஊழியர்.

உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பாதாள சாக்கடை, கழிவு நீர் தொட்டிகளை தூய்மை செய்யும் போது விஷ வாயு தாக்கி எண்ணற்ற மனித உயிர்கள் இறந்துள்ளன. ஆனால் அந்த நேரத்தில் மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு மீண்டும் அது தொடர்கதையாக கூடிய சூழல் தான் இன்றளவும் உள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூர் அருகே அந்தோணியர் கோயில் தெருவில் உள்ள பாதாள சாக்கடையை தூய்மை பணியாளர்கள் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தூய்மை செய்தனர்.

கையில் ஒரு கவச உறை, முககவசம் இன்றி சாக்கடையில் 10 அடி ஆழத்திற்கு கழிவு நீரில் இறங்கி அடைப்பை சரி செய்தனர். தமிழகத்தில் மேலும் உயிரிழப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 22 May 2021 7:00 AM GMT

Related News