/* */

தஞ்சையில் தேர்வு மையத்தில் மின்வெட்டு: மாணவர்கள் அவதி

தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 45 நிமிடங்கள் மின்சாரம் இல்லாதததால் மாணவர்கள் அவதியுற்றனர்

HIGHLIGHTS

தஞ்சையில் தேர்வு மையத்தில் மின்வெட்டு: மாணவர்கள் அவதி
X

மின் தடையால் போதிய வெளிச்சமின்றி தேர்வெழுதிய மாணவர்கள். 

தமிழகத்தில் பிளஸ் -2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 28-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் பிளஸ் -2 பொதுத்தேர்வு 107 மையங்களில் நடக்கிறது. 225 பள்ளிகளை சேர்ந்த 13 ஆயிரத்து 235 மாணவர்களும், 15 ஆயிரத்து 195 மாணவிகளும். மேலும் 604 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களுக்காக மூன்று தனி தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 29 ஆயிரத்து 34 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

இவர்களில் 162 மாற்றுத்திறனாளி மாணவர்களும் அடங்குவர். தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் கண்காணிக்க 206 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2 ஆயிரத்து 533 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தஞ்சை, அரசர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 45 நிமிடங்கள் மின்சாரம் தடை பட்டது. இதனால், மாணவர்கள் அவதியுற்றனர். பின்னர் உடனடியாக பள்ளி நிர்வாகம் மின் கோளாறை சரி செய்து மின் இணைப்பு வழங்கினர். இங்கு மட்டும் 392 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 5 May 2022 6:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்