/* */

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் மேம்பாட்டுப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு ஏற்ற வகையில் அங்காடி அமைப்பது குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

தஞ்சாவூர்  அரண்மனை வளாகத்தில் மேம்பாட்டுப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
X

 தஞ்சாவூர் மாநகராட்சி அரண்மனை வளாகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சி அரண்மனை வளாகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகராட்சி அரண்மனை வளாகத்தில் கலைக் கூடம் எதிரில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு ஏற்ற வகையில் அங்காடி அமைப்பது குறித்து கட்டிட வல்லுநர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கலந்தாலோசனை செய்யப்பட்டது.

சங்கீத மஹால் வளாகத்தில் உள்ள கழிவறைகளை மேம்படுத்துதல் குறித்தும்,மாவட்டதொழில் மையம் மூலம் உணவு அரங்கம் அமைப்பது குறித்தும் சங்கீத மஹால் மேல்தளத்தில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மேம்படுத்துதல் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.

அரண்மனை வளாகத்தில் உள்ள பழமையான கட்டிடங்களில் உள்ள செடிகள் மற்றும் புதர்களை அகற்றுவதற்கு தேவையான திட்ட மதிப்பீடு சம்பந்தப்பட்ட துறைகள் தயார் செய்து பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளி மதில் சுவரில் வரையப்பட்டுவரும் ஓவியங்களையும், பள்ளியில் அமைக்கப்பட்டுவரும் ஸ்மார்ட் வகுப்பறைகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார். தொடர்ந்து, பிள்ளையார்பட்டி உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் ஏற்படுத்தப்பட்டுள்ள தகிவமை கண்காட்சி அரங்கின் மேம்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.எச்.எஸ்.ஸ்ரீகாந்த்,மாநகராட்சிபொறியாளர் திரு.சேர்மகனி,மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன்,வட்டாட்சியர் அருள்ராஜ்,தொல்லியல் துறைஉதவிபொறியாளர்கள் தினேஷ், கேசவன், அரண்மனை கலை கூட காப்பாட்சியர் சிவகுமார்,சுற்றுலா வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Dec 2023 5:15 PM GMT

Related News