/* */

தென்காசி: ஊர்க்காவல் படை பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி, வட்டார துணை தளபதி பதவிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க அழைப்பு.

HIGHLIGHTS

தென்காசி: ஊர்க்காவல் படை பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
X

பைல்படம்.

தென்காசி மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி மற்றும் வட்டார துணைத் தளபதி பதவிக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட காவல்துறை அறிவிப்பு

தென்காசி மாவட்ட ஊர்க்காவல்படைப் பிரிவில் காலியாக உள்ள வட்டார தளபதி (Area Commander) மற்றும் துணை வட்டார தளபதி (Deputy Area Commander ) பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறது. கல்வித்தகுதி பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு 21 முதல் 50 வயதுக்குள் இருத்தல் வேண்டும். இது ஒரு கவுரவப்பதவி என்பதால் ஊதியம் ஏதும் வழங்கப்படமாட்டாது. தேசிய மாணவர் படையில் பயிற்சி பெற்ற விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், உயர் பதவி வகிப்பவர்கள் வட்டார தளபதி பதவியில் சேர்ந்து தொண்டு செய்ய விருப்பம் மற்றும் சேவை மனப்பான்மை உடைய ஆண்/பெண் நபர்கள் விண்ணப்பிக்கலாம். வட்டார தளபதி பதவி துணை வட்டார தளபதி பதவி விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பத்தை சுயவிபரக் குறிப்புடன் காவல் கண்காணிப்பாளர், தென்காசி மாவட்டம் என்ற முகவரிக்கு 20.05.2022-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 12 May 2022 2:32 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  7. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  8. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  9. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  10. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!