/* */

விவசாய குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருடன் விவசாயிகள் வாக்குவாதம்

தங்கள் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்

HIGHLIGHTS

விவசாய குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருடன் விவசாயிகள் வாக்குவாதம்
X

விவசாய கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரும், விவசாயிகளும் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தங்கள் குறைகள் தீர்க்கப்படவில்லை என்றால் ஏன் கூட்டத்திற்கு வருகிறீர்கள்? என விவசாயிகளை பார்த்து ஆட்சியர் கேள்வி எழுப்பியது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து வட்டார பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பங்கேற்றனர். இந்த நிலையில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை ஆட்சியரிடம் முன்வைத்தனர்.

இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போன சூழ்நிலையில் குருவை சாகுபடி மேற்கொண்ட நிலையில் ஆயிரக்கணக்கான பயிர்கள் கருகி காணப்பட்டது. இந்த நிலையில் தங்கள் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்தனர்.

இதற்கு மாவட்ட ஆட்சியர் அணையில் குறைவாக தண்ணீர் இருக்ககூடிய நிலையில், விவசாயிகள் குளத்து தண்ணீரை நம்பி விவசாயம் மேற் கொண்டுள்ளனர்.

அதேசமயம், பருவமழையும் சரியாக பெய்யாத காரணத்தினால் இவ்வாறன சுழல் ஏற்பட்டுள் ளது. வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கூடிய சூழலை தமிழக அரசு எடுக்க வேண்டும் என கூறிய நிலையில் தங்களது எந்த குறைகள் குறித்து எந்தவித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கப்படவில்லை விவசாயிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன் வைத்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் துரை.ரவிசந்திரன் தங்கள் குறைகள் தீர்க்கப்படவில்லை என்றால் ஏன் வருகிறீர்கள் என்று ஆட்சியர் விவசாயிகளை பார்த்து கேள்வி எழுப்பியது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் ஆட்சியர் பதில் சொல்வதும், கூட்டம் கூச்சல் குழப்பமாக நடைபெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 Aug 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு