குருவிகுளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

குருவிகுளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு   ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
X

தென்காசி மாவட்டம் குருவிகுளம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வட்டாரத்தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வட்டாரத் தலைநகரங்களில் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், குருவிகுளம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவர் அய்யப்பசாமி தலைமை வகித்தார். முன்னாள் வட்டாரத் தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் மணிபாரதி வரவேற்றார். தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணன், வெங்கட சுப்பிரமணியன்,சுமதி,மாரியம்மாள்,திருமங்கை ஆழ்வார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டச் செயலாளர் மாரிமுத்து கோரிக்கை விளக்க உரை ஆற்றினார்.மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் நிறைவுரை ஆற்றினார். இறுதியாக வட்டாரப் பொருளாளர் வனிதா நன்றி கூறினார். இதில் 70க்கும் மேற்பட்ட இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகள்: புதிய தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெறுதல்,பழைய பென்சன் திட்டத்தை நடைமுறை படுத்துதல்,காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்புதல், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலதிட்ட உதவிகளும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும் போன்ற முப்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர்களும் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story
தினம் ஒரு கப் பப்பாளி சாப்பிட்டா உடலில் உண்டாகும் மாற்றங்கள்  என்னென்ன?