கூடுதல் லீவு...! பள்ளி குழந்தைகளே.. உங்களுக்கு ஒரு ஜாலியான செய்தி..!
பள்ளிப்பருவம்
கோடை வெயில் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணி காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இந்த கல்வி ஆண்டின் இறுதிப் பணி நாள் வரும் 26ஆம் தேதியுடன் முடிவடைவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இருபத்தி நான்காம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைகிறது. ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கொடுத்துள்ள பணிகளை முடிக்க இருபத்தி ஆறாம் தேதி ஆகி விடுகிறது. எனவே மாணவ, மாணவிகளுக்கு இருபத்தி நான்காம் தேதி முதல், ஆசிரியர்களுக்கு இருபத்தி ஆறாம் தேதி முதல் இந்த ஆண்டுக்கான கோடை விடுமுறை தொடங்குகிறது.
அடுத்த கல்வி ஆண்டு ஜூன் 3ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதால் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருந்தது. இருப்பினும் தமிழ்நாட்டில் தற்போது வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதே போல் கோடை வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பள்ளிகளுக்கு மேலும் ஒருவாரம் விடுமுறை விடப்படும் என கூறப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு மே கடைசி வாரம் தான் அதிகாரப்பூர்வமாக வெளிவரும். அதுவரை வரும் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu