/* */

சிவகங்கை-கொரானா தடுப்பு நடவடிக்கை திருப்தி - கண்காணிப்பு அலுவலர் தகவல்

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

HIGHLIGHTS

சிவகங்கை-கொரானா தடுப்பு நடவடிக்கை திருப்தி - கண்காணிப்பு அலுவலர் தகவல்
X

கொரானா கண்காணிப்பு அலுவலர் மற்றும் முதன்மை செயலர் கார்த்திகேயன் ஆய்வு 

கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் திருப்திகரமாக செயல்பட்டு வருகின்றது- கொரானா கண்காணிப்பு அலுவலர் கார்த்திகேயன் மகிழ்ச்சி

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரானா கண்காணிப்பு அலுவலர் மற்றும் முதன்மை செயலர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார் அப்பொழுது ஆக்சிசன் தேவை, தடுப்பூசி கையிருப்பு, கொரானா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் படுக்கை வசதி உள்ளிட்டவைகளை கேட்டறிந்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையத்தை கள ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளோடு கொரானா நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். தொடர்பு செய்தியாளர்களை சந்தித்த கார்த்திகேயன்,

சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொண்ட கொரானா பரிசோதனையில் 10 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கவலை அளிக்கக் கூடிய ஒரு விஷயம் இதனைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாவட்டத்தில் நாள்தோறும் சராசரியாக 200 பேர் கொரானா நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றவர், சிவகங்கை மாவட்டத்திற்க்கு கூடுதலாக தேவைப்படும் திரவ ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பெற்று தர சென்னையில் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும்

கொரானா தடுப்பூசி போடுவதை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தவர், முழு ஊரடங்கு கட்டுப்பாட்டால் கொரானா பாதிப்பு குறையும் என நம்பிக்கை தெரிவித்தார். கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் திருப்திகரமாக செயல்பட்டு வருகின்றது என கார்த்திகேயன் மகிழ்ச்சி தெரிவித்தார்.

Updated On: 22 May 2021 1:26 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!