/* */

சிவகங்கையில் புத்தகத் திருவிழா நிறைவு

சித்திரைத் திருவிழாவைப் போன்று, சிவகங்கையில் புத்தகத்திருவிழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

சிவகங்கையில் புத்தகத் திருவிழா நிறைவு
X

சிவகங்கையில், புத்தக திருவிழா நிறைவு விழா சான்றிதழ் வழங்கிய  மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன்ரெட்டி

சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற புத்தகத்திருவிழா – 2022-ன் நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.

இந்நிறைவு விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், சித்திரைத்; திருவிழாவைப் போன்று, சிவகங்கையில் புத்தகத்திருவிழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாக இருந்தாலும், கல்வியில் சிறந்த மாவட்டமாக விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்பு மிக்க மாவட்டமாகவும் சிவகங்கை மாவட்டம் விளங்குகிறது. தற்சமயம், முதன்முதலாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 11 நாட்கள் சிறப்பாக நடைபெற்ற புத்தகத்திருவிழா-2022 பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்துள்ளது.சிவகங்கையில், புத்தகத்திருவிழா கடந்த 15.04.2022 அன்று, அமைச்சர்களால் துவக்கி வைக்கப்பட்டு, 11 நாட்களாக சிறப்பாக நடைபெற்றது.

புத்தகம் வாசிப்பு என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமானதாகும். பொதுமக்களின் எண்ணம் மற்றும் சிந்தனைகளை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குவதற்கும் அடிப்படையாக அமைகிறது. தற்சமயம் சமூகவலைதளங்கள் வாயிலாக வெளியிடும் செய்திகளை மட்டுமே வைத்து பொதுமக்கள் தங்களின் பொது அறிவுத்திறனை வளர்த்து வருகிறார்கள். புத்தக வாசிப்புத்திறனை அதிகப்படுத்திடும் போது அறிவுத்திறனை மேம்படுத்திட முடியும். அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிவகங்கையில் முதன்முறையாக பெரிய அளவில் புத்தகத்திருவிழாவினை, பபாசி அமைப்புடன் இணைந்து நடத்திட திட்டமிடப்பட்டு, பொதுமக்களின் பெருத்த ஆதரவுடன் வெற்றிகரமானதாக நடத்தப்பட்டுள்ளது.

இப்புத்தகத்திருவிழாவில், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் தினந்தோறும் வருகை புரிந்து பார்த்து பயன்பெறும் வகையில், தனித்தனியாக நேரம் ஒதுக்கீடு செய்தும்,இது தவிர, மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் ஆகியவைகளிலிருந்து ஊராட்சி மன்றத்தலைவர், பேரூராட்சி மன்றத்தலைவர் மற்றும் நகர்மன்றத்தலைவர் ஆகியோர்களின் பங்களிப்புடன் அந்தந்தப்பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் வருகை புரிந்து இப்புத்தகத்திருவிழாவின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

இப்புத்தகத்திருவிழாவிற்கு பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் பொருட்டு, போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுத்தப்பட்டு, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டு, சிறுவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களும், பாரம்பரிய உணவுக்கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தது. இவைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் இருந்திருக்கும் என்பது இப்புத்தகத்திருவிழாவின் வெற்றி உணர்த்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில், அரசு சார்பில் உள்ள நூலகங்கள், கிராம அளவில் உள்ள நூலகங்கள் மற்றும் நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியில் உள்ள நூலகங்கள் ஆகியவைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் மாவட்டத்தில்; நூலகங்களை அதிகப்படுத்துவதற்கும், நூலகத்தில் கூடுதலாக பல்வேறு வகையான புத்தகங்களை நிறுவுவதற்கும், விருப்பமுள்ள தன்னார்வலர்கள் முன்வந்து, இப்புத்தக கண்காட்சியின் மூலம் உதவியுள்ளனர். மேலும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் , நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் ஆகியோர்கள் நன்கொடை வழங்கியும், மாவட்டத்திலுள்ள பள்ளி நூலகங்கள் மற்றும் கிராமப்புற நூலகங்களில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு வகையான புத்தகங்களை நன்கொடையாகவும் வழங்கி, சில பள்ளி நூலகங்களை தத்தெடுத்தும் உள்ளனர். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவகங்கையில்; சிறப்பாக நடைபெற்ற இப்புத்தகத்திருவிழா-2022 பொதுமக்களின் பெருத்த ஆதரவுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதற்கு, அடிப்படையாக இருந்த பொதுமக்களுக்கும், உறுதுணையாக இருந்த பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்களுக்கும் மற்றும் பபாசி அமைப்பினை சார்ந்தவர்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள்; உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்வதாகவும் ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து புத்தகத்திருவிழா-2022-ல் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தகம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நிறைவு விழாவில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் த.செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் க.வானதி, தலைவர் (ஆவின் கூட்டுறவு சங்கங்கள்) சேங்கைமாறன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் மு.முத்துக்கழுவன் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சி.மணிவண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சி.ரத்தினவேல், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் பிரபாவதி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, தென்னந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் செயலாளர் எஸ்.கே.முருகன் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 April 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு