/* */

சிவகங்கை ஐயப்ப சுவாமி கோவிலில் புஷ்பயாகம் விழா

சிவகங்கை ஐயப்ப சுவாமி கோவிலில் புஷ்பயாகம் விழாவையொட்டி சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை நடைபெற்றது.

HIGHLIGHTS

சிவகங்கை ஐயப்ப சுவாமி கோவிலில் புஷ்பயாகம் விழா
X

மலர் அலங்காரத்தில் இருந்த சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ ஐயப்ப ஸ்வாமி திருக்கோவிலில் புஷ்பயாகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக மூலவர் ஸ்ரீ ஐயப்ப சுவாமிகள் உற்சவர் ஐயப்ப சுவாமியின் சர்வ சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து கோபுர தீபம் கும்ப தீபம் நாக தீபம் மற்றும் சோட்ச உபசாரங்கள் நடைபெற்றன. பின்னர் சுவாமிக்கு துளசி, சம்பங்கி, செவ்வந்தி, அரளிப்பூ மற்றும் பலவகையான உதிரி பூக்களால் புஷ்ப யாகத்தை நடத்தினர். நிறைவாக கோபுர தீபம் காண்பித்து மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை கட்டப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்

Updated On: 12 Jan 2022 11:14 AM GMT

Related News