காரைக்குடி மாநகராட்சி அறிமுகக் கூட்டம்: அமைச்சர்கள்,கலெக்டர் பங்கேற்பு..!

காரைக்குடி மாநகராட்சி அறிமுகக் கூட்டம்: அமைச்சர்கள்,கலெக்டர் பங்கேற்பு..!
X

மாநகராட்சி அறிமுக கூட்டத்தில் மேயருக்கு சிறப்பு செய்த அமைச்சர் கே.என்.நேரு 

காரைக்குடி மாநகராட்சி அறிமுக கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பங்கேற்று மேயருக்கு கெளரவம் செய்தார்கள்.

காரைக்குடி மாநகராட்சி அறிமுக கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பங்கேற்று மேயருக்கு கெளரவம் செய்தார்கள்.

சிவகங்கை :

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆகியோர் காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தின் முதல் அறிமுகக் கூட்ட விழாவில் பங்கேற்று சிறப்பித்து, காரைக்குடி மாநகராட்சி மேயர் சே.முத்துத்துரைக்கு சிறப்பு செய்தார்கள்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆகியோர் இன்றைய தினம் (09.10.2024) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தின் முதல் அறிமுக கூட்ட விழாவில் பங்கேற்று சிறப்பித்து, காரைக்குடி மாநகராட்சி மேயர் சே.முத்துத்துரை சிறப்பு செய்தார்கள்.

இவ்விழாவில், சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் , சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.தமிழரசி ரவிக்குமார் , (மானாமதுரை) மற்றும் கருமாணிக்கம் , (திருவாடனை), காரைக்குடி மாநகராட்சி ஆணையாளர் எஸ்.சித்ரா சுகுமார், காரைக்குடி துணை மேயர் நா.குணசேகரன், முன்னாள் அமைச்சர் தென்னவன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!