ஈரோடு கிழக்கு: தி.மு.க., களமிறக்க திட்டம் – முடிவை எடுக்கின்ற செயற்குழு!

ஈரோடு கிழக்கு: தி.மு.க., களமிறக்க திட்டம் – முடிவை எடுக்கின்ற செயற்குழு!
X


ஈரோடு கிழக்கு தொகுதி செய்தி

ஈரோடு கிழக்கு தொகுதி: தி.மு.க - காங்கிரசுக்கு இடையிலான நிலைப்பாடு

ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கே கொடுத்து விடலாம் என, முதல்வர் ஸ்டாலின் விரும்பும் நிலையில், தி.மு.க., களமிறங்க வேண்டும் என, துணை முதல்வர் உதயநிதி கருதுகிறார். எந்த கட்சி போட்டியிடுவது என்பது குறித்து, நாளை நடக்கும் செயற்குழுவில் முடிவு எடுக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது.

இந்த தொகுதிக்கு ஏற்கனவே நடந்த இடைத்தேர்தலின்போது, காங்கிரஸ் சார்பில் போட்டியிட, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் விரும்பினார். சமூக சேவையில் ஈடுபாடு கொண்டவர் என்பதால், அவரை வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் மேலிடம் முன்வந்தது. ஆனால், தி.மு.க., தலைமையின் வலியுறுத்தல்படி, கடைசி நேரத்தில் இளங்கோவன் போட்டியிட்டார்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினை சந்திக்க, அம்மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் காத்திருந்தனர். அப்போது, மக்கள் ராஜன் மற்றும் ஆதித் தமிழர் பேரவை தலைவர் அதியமான் ஆகியோரை மட்டும் முதல்வர் சந்தித்தார்; அவர்கள் வழங்கிய பரிசுப் புத்தகங்களை பெற்றுக் கொண்டார்.

வரும் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் விரும்புவதால், மீண்டும் இந்த தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கி விடலாம் என அவர் கருதுகிறார்.

தமிழ் செய்திகள்


Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி