தென்னையில் சிவப்பு கூண்வண்டு..! தாக்குதல் தடுக்கும் உத்திகள்..!
தென்னை மரங்களில் சிவப்பு கூண்வண்டு மேலாண்மை
கொடுமுடி: தென்னை மரங்களில் சிவப்பு கூண்வண்டு மேலாண்மை குறித்து, விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை விளக்கமளித்துள்ளது.இது தொடர்பாக கொடுமுடி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முத்துக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பூச்சியினால் தாக்கப்பட்ட மரங்கள்
பூச்சியினால் தாக்கப்பட்டு முற்றிலும் சேதமடைந்த மரங்களை அப்புறப்படுத்தி தீயிட்டு எரித்து விட வேண்டும். தென்னை மரத்தின் குருத்தில் இரண்டு பங்கு மணல் மற்றும் ஒரு பங்கு வேம்பு புண்ணாக்கு கலந்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை இட வேண்டும்.
சிவப்பு கூண்வண்டு இனக்கவர்ச்சி பொறிகள்
சிவப்பு கூண்வண்டு இனக்கவர்ச்சி பொறிகளை ஒரு ஏக்கருக்கு, 2 என்ற விகிதத்தில் வைப்பதன் மூலம் ஆண் வண்டுகள் அழிக்கப்படுகிறது.
காயங்கள் ஏற்படுவதை தவிர்த்தல்
தென்னை மரத்தில் காயங்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். மரத்திலுள்ள ஓட்டைகளை களிமண் (அ) சிமெண்ட் கொண்டு அடைத்து விட வேண்டும்.பச்சை மட்டைகளை வெட்டுவதை தவிர்க்கவேண்டும்.
வேர் ஊட்டம்
நன்கு வளர்ச்சியடைந்த பென்சில் அளவு தடிமன் மற்றும் சந்தன நிறத்தில் உள்ள வேர்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதனுடன் வேர்களின் தடிமனுக்கு ஏற்ப நீள்வடிவில் உள்ள சிறிய பாலித்தீன் பைகளில், 10 மி.லி., மோனோகுரோடோபாஸ் மற்றும் 10 மி.லி., தண்ணீர் கலந்து வேர்களில் கட்டிவிட வேண்டும். மேற்கண்ட வேர் ஊட்டம் கொடுக்கப்பட்ட மரங்களில் 45 நாட்களுக்கு தேங்காய் மற்றும் இளநீர் அறுவடை செய்வதை கட்டாயம் தவிர்க்கவேண்டும்.
ஊட்டச்சத்து மேலாண்மை
ஊட்டச்சத்து அளவு
வேம்பு புண்ணாக்கு ஒரு மரத்துக்கு 5 கிலோ
நைட்ரஜன் 560 கிராம்/மரம்/வருடம்
பாஸ்பரஸ் 320 கிராம்/மரம்/வருடம்
பொட்டாஷ் 1,200 கிராம்/மரம்/வருடம்
ஒரு தென்னை மரத்-திற்கு ஒரு ஆண்டிற்கு, 560 கிராம் நைட்ரஜன், 320 கிராம் பாஸ்-பரஸ் மற்றும் 1,200 கிராம் பொட்டாஷ் தேவை. இதை நாம் 10:26:26, டி.ஏ.பி., மற்றும் எம்.ஓ.பி., உரங்களின் மூலம் மரங்க-ளுக்கு இடலாம். அடி மரத்திலிருந்து 4-5 அடி துாரத்தில் சத்து உறிஞ்சும் வேர்கள் அதிக அளவில் இருக்கும். எனவே உரத்தை அடி மரத்திலிருந்து 4-5 அடி தொலைவில் மரத்தை சுற்றி வட்ட வடிவில் குழி தோண்டி இடவேண்டும்.
நுண்ணூட்ட சத்து மேலாண்மை
நுண்ணுாட்ட சத்து குறைபாட்டை போக்க ஒரு மரத்திற்கு ஒரு வருடத்திற்கு, போராக்ஸ்-200 கிராம், ஜிப்சம்-1 கிலோ மற்றும் மெக்னீசியம் சல்பேட்-500 கிராம் என்ற அளவில் இடவேண்டும். சணப்பை அல்லது தக்கை பூண்டு விதைகளை மரத்தை சுற்றி ஒரு மரத்திற்கு, 50 கிராம் அளவில் விதைக்க வேண்டும்.இது தொடர்பாக ஆலோசனை தேவைப்படும் விவசாயிகள், 99429-49505 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu