சேலம் புதுபஸ்ஸ்டாண்ட் கட்டண கழிப்பிடத்தில் கூடுதல் கட்டணம் வசூல்:நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சேலம் பாரத ரத்னா எம்ஜிஆர் புறநகர் பேருந்து நிலையத்தின் தோற்றம் (கோப்பு படம்)
salem new busstand,excess charges collect for toilet
சேலம் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் செயல்படும் மாநகராட்சியின் கட்டண கழிப்பிடத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தினை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
salem new busstand,excess charges collect for toilet
சேலம் புது பஸ்ஸ்டாண்டில் எப்போதும் நிரம்பி வழியும் பயணிகள் கூட்டம் (கோப்புபடம்)
salem new busstand,excess charges collect for toilet
சேலம் புதுபஸ்ஸ்டாண்டில் இருந்து அருகிலுள்ள மாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ஆம்பூர், வேலுார், ஊட்டி, பழனி, கோவை, ஈரோடு, விழுப்புரம், சென்னை, பெங்களூரு, திருப்பதி, திருவண்ணாமலை, மதுரை, தேனி,நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு தினந்தோறும் ஏராளமான பஸ்கள் செல்கின்றன. இதனால் எப்போதும் புதுபஸ்ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இரவு பகல் பாராமல் 24 மணிநேரமும் பயணிகள் கூட்டம் இருந்துகொண்டேதான் இருக்கும்.
சேலம் புதுபஸ்ஸ்டாண்டில் தனியார் நிறுவனம் சார்பில் இலவச சிறுநீர் கழிப்பிடம் ஆண்களுக்கு மட்டும் அமைக்கப்பட்டுள்ளதால் அதனைப் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.இருந்த போதிலும் இரவு நேரங்களில் கண்ட இடத்தில் சிறுநீர் கழித்துவிட்டு போகும் பயணிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். அதாவது பஸ்ஸ்டாண்ட் நுழைவு வாயிலில் இருந்து பஸ்ஸ்டாண்ட் உள்ளே வரை பலர் ஓரத்தில் நின்று கொண்டு சிறுநீர் கழித்து வருவதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.
salem new busstand,excess charges collect for toilet
சேலம் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் செயல்படும் கட்டணக்கழிப்பறை (கோப்பு படம்)
salem new busstand,excess charges collect for toilet
கூடுதல் கட்டண வசூல்
பஸ்களில் வெளியூர்களில் இருந்து வரும் பெண்கள், வெளியூர்களுக்கு செல்லவேண்டிய பெண்கள் யாவரும் கட்டாயமாக கட்டணக் கழிப்பிடத்தில்தான் சிறுநீர் கழி
க்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாநகராட்சி சார்பி்ல் உள்ள இரண்டு கட்டணக் கழிப்பிடத்திலும் மாநகராட்சி நிர்ணயம் செய்த கட்டணத்தினை விட கூடுதல் கட்டணமே வசூலிக்கின்றனர். அதாவது சிறுநீர் கழிக்க ரூ. 2 என போர்டில் அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தாலும் பெண்களிடம் ரூ. 10 சிறுநீர் கழிக்க கட்டணமாக வசூல் செய்வதால் பல பெண்கள் பாதிப்படைகின்றனர். இதனைத் தட்டிக்கேட்க அவர்களால் முடியாது. கேட்டால்பிரச்னை என பேசாமல் பலர் கேட்பதைக்கொடுத்துவிட்டு வருகின்றனர்.
salem new busstand,excess charges collect for toilet
கட்டணக் கழிப்பிட வளாகத்தில் கட்டண விபரம் வைக்கப்பட்டுள்ள போர்டு (கோப்பு படம்)
salem new busstand,excess charges collect for toilet
ஆனால் தட்டிக்கேட்க வேண்டிய அதிகாரிகள் இதனைக் கண்காணித்து பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதைத் தடுக்க வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்னையான இந்த விஷயத்தில் மாநகராட்சி அதிகாரிகள் அக்கறை காட்டவேண்டும். அவ்வப்போது வந்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அங்குவைக்கப்பட்டுள்ள போர்டில் ஒரு கட்டணம் உள்ளது. ஆனால் வசூல் செய்வது அதிகமாக உள்ளது. ஏன் இந்த முரண்பாடு? இவையெல்லாம் அதிகாரிகளுக்கு தெரியுமா? என பெண்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அளிக்க உள்ளதாகவும் பாதிப்படைந்த பெண்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
salem new busstand,excess charges collect for toilet
salem new busstand,excess charges collect for toilet
பிளாட்பாரக்கடையால் பாதிப்பு
சேலம் புதுபஸ்ஸ்டாண்ட் உட்புறம் உள்ள பயணிகள் நடந்து செல்லும் பாதையில் பிளாட்பாரக்கடைகள், நிரந்தரக்கடைகள் என பல கடைகள் ஆக்கிரமித்து உள்ளதால் நடந்து செல்லவோ, அல்லது ஒதுங்கி நிற்கவோ இடம் இல்லாத நிலையே தொடர்கிறது. இந்த பிளாட்பாரக்கடைகளானது நாளுக்கு நாள் புற்றீசல் போல் பெருகிவருவதால் பயணிகளுக்கு பெருத்த இடையூறு ஏற்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கும்போது, தமிழகத்தில் எந்த நகரின் பஸ்ஸ்டாண்டிலும் சேலம் பஸ்ஸ்டாண்டில் உள்ளதுபோல் கடைகள் இல்லை. இங்குதான் இவ்வளவு கடைகள் உள்ளன. இதனால் பஸ்களுக்கு பயணம் செய்ய புது பஸ்ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள் ஒதுங்கி நிற்கக்கூட இடம் இல்லாமல் தவிக்கின்றனர். கடைகள் அதிகம் தேவை வாடகை தேவை எனில் இதற்காக தனி இடம் ஒதுக்கவேண்டும். அதை விடுத்து பயணிகள் நடந்து செல்லும் வழியில் இதுபோல் பிளாட்பாரக்கடைகளை விரித்து மக்களுக்கு இடையூறு செய்வது எந்த விதத்தில் நியாயம் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்புகின்றனர்.
salem new busstand,excess charges collect for toilet
சேலம் புதுபஸ்ஸ்டாண்ட் உட்புறம் பயணிகள் நடக்கும் பகுதியில் விரிக்கப்பட்டுள்ள கடை ,இதுபோல் பல கடைகள் இருப்பதால் நடப்பதற்கு கூட இடம் இல்லாமல் பயணிகள் தவிக்கும் நிலை. மழைக்காலத்தில் சொல்லவே தேவையில்லை. (கோப்பு படம்)
salem new busstand,excess charges collect for toilet
மழை நேரத்தில் பாதிப்பு
மழை வந்துவிட்டால் மக்களுக்கு ஒதுங்க கூட இடம் இல்லாத நிலையே இந்த கடைகளால் ஏற்படுகிறது. ஆகவே பஸ்கள் நிற்கும் பகுதியில் விரிக்கப்பட்டுள்ள பிளாட்பாரக்கடைகளை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கையினை சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், கட்டணக்கழிப்பிடத்திற்கு உரிய தொகையை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களி்ன் கோரிக்கையாக உள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் மக்கள் திலகம் எனப்போற்றப்பட்டு வருபவருமான பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்கள்பெயரில் செயல்படும் பஸ்ஸ்டாண்டில் அவர் அதிகம் நேசித்த மக்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படலாமா?- அதிகாரிகள் இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்...
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu