salem and around area flu fever spread சேலத்தில் பருவ மாற்றத்தால் பரவும் மர்ம காய்ச்சல் :முறையான சிகிச்சை தேவை

salem and around  area flu fever spread  சேலத்தில்  பருவ மாற்றத்தால் பரவும்  மர்ம காய்ச்சல் :முறையான சிகிச்சை தேவை
X

பருவ நிலை மாற்றத்தினால்  மர்ம காய்ச்சல் ஏற்படுகிறது (கோப்பு படம்)

salem and around area flu fever spread சேலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் அண்மைக்காலமாக பொதுமக்கள் மர்ம காய்ச்சலால் பாதிப்படைந்து சிகிச்சை மேற்கொள்கின்றனர்.


salem and around area flu fever spread

சேலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பருவநிலை மாற்றத்தினால் மர்ம காய்ச்சல் பரவுவதால் முறையான சிகிச்சையை ஆஸ்பத்திரியில் எடுத்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பருவ நிலையானது மாற்றம் அடைந்தாலே வயதானோர் குழந்தைகள் என பலருக்கும் உடல் நல பாதிப்பு ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்றாகும். இருந்த போதிலும் நல்ல உடல் ஆரோக்யமானவர்களுக்கு கூட இந்த பருவ நிலைமாற்றத்தினால் திடீரென உடல் சுகவீனம் ஏற்படுவது உண்டு. சாதாரணமாகவே மழையில் நனைந்தால் தொடர் இருமல், மூக்கில் சளி ஒழுகுதல் உள்ளிட்ட பிரச்னைகள் முதலில் பாதிப்படையச் செய்யும் . பின்னர் லேசான காய்ச்சலில் துவங்கி ஒரு சிலருக்கு தீவிரமடையவும் வாய்ப்புண்டு. ஒரு சில நேரத்தில் சிலருக்கு ப்ளூ காய்ச்சல் ஏற்படுவதும் உண்டு. அதுபோல் பாதிப்படைந்தவர்கள் உடனடியாக டாக்டரிடம் சென்று சிகிச்சை மேற்கொண்டார்கள் என்றால் அவர்களுக்கு பூரண குணமாகிவிடும்.

salem and around area flu fever spread


salem and around area flu fever spread

இந்நிலையில் அண்மைக்காலமாகவே சேலம் அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 20 பேருக்கு ஸ்பெஷல் ரத்தப்பரிசோதனை செய்வது, தற்போது 50 ஆக அதிகரித்துள்ளது. இந்த ரத்தபரிசோதனையில் வாரத்தில் 2 முதல் 3 பேருக்கு எலிக்காய்ச்சல், டைப்பஸ் பாக்டீரியா பாதிப்பு கண்டறிந்து 5 நாள் தொடர் சிகிச்சையும் மேற்கொள்ள அனுப்பப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் மாவட்டத்திலுள்ள சுகாதார நிலையங்களில் எப்போதும்போலவே நோயாளிகள் வருவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

salem and around area flu fever spread


salem and around area flu fever spread

சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கும்போது,

பருவ நிலை மாற்றம் ஏற்பட்டாலே ஒரு சிலருக்கு உடல் ஆரோக்ய பாதிப்பு தானாகவே ஏற்படுவது உண்டு.ஒரு சிலருக்கு கண்சிவந்து காணப்படும். மூக்கில் நீர்வடிதல், கண் எரிச்சல், தொடர் இருமல், உடல் அசதி, உடல் வலி, வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்படும். மேற்கண்ட அறிகுறிகளில் எது ஏற்பட்டாலும் 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், மற்றும் சர்க்கரை நோயாளிகள், முதியோர், ரத்தக்கொதிப்பு போன்ற இணை நோய் உள்ளவர்கள் உடனே டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். அதேபோல்அதிக தண்ணிர் குடிக்க வேண்டும். ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும். ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும். ப்ளூ காய்ச்சலானது வேகமாக பரவக்கூடியது.அதேபோல் இருமல் வந்தாலோ அல்லது தும்மல் வந்தாலோ கையில் ஒரு துணியை வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். பேசும்போது எச்சில் நம்மீது படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது மிக மிக அவசியம்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கும்போது, பருவமாற்றத்தினால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கும்போது, பருவமழைக்காலங்களில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, பன்றிக்காய்ச்சல், போன்ற தொற்று நோய்கள் மற்றும் சாதாரண சளி, காய்ச்சல், போன்றவற்றைத் தடுக்க உரிய நேரத்தில் நடவடிக்கையானது எடுக்கப்படுகிறது.

salem and around area flu fever spread


salem and around area flu fever spread

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் தேவையான மருந்து ,மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கு தனி சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரம் செயல்படுகிறது. மாவட்டத்தில் மற்ற காய்ச்சல் எதுவும் பரவவில்லை என பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அவர்கள் தெரிவித்தனர்.

எச்சரிக்கை தேவை

மழைக்காலத்தில் ஒரு சிலர் உடம்புக்கு எதுவும் ஆகாது என மழையில் நனைந்து கொண்டே பயணிக்கின்றனர். ஆனால் அந்த நேரத்தில்அதன் பாதிப்பானது அவர்களுக்கு தெரிவதில்லை. இரண்டு நாட்கள் கழித்து உடல் வலியில் துவங்கி தொடர் தும்மல், காய்ச்சல் என பல பாதிப்புக்கு ஆளாகின்றனர். சாதாரண சளியில் துவங்கும் உடல்ந ல பாதிப்பானது கடைசியில் காய்ச்சலில் வந்து முடிகிறது. இதற்கான சிகிச்சை செலவே ஆயிரம்ரூபாயைத் தாண்டிவிடுவதால் நடுத்தரக்குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். சளி, காய்ச்சல் என வந்து விட்டாலே பாதிப்படைபவர்கள் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். இதனால் மற்றவர்களுக்கும் பரவாது இவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாது என்பதை மனதில் கொண்டு வாழ்க்கைப் பயணத்தினைத் தொடரவேண்டும்.... மழையோ,வெயிலோ நம் உடல் நல பாதிப்பில்லாமல் பார்த்துக்கொள்வதில்ஒவ்வொருவருக்குமே பொறுப்பு உள்ளது என்பதை எந்த சூழ்நிலையிலும் மறந்துவிடக்கூடாது.

Tags

Next Story