கோராத்துப்பட்டி பகுதியில் மரணகுழியை மூட நடவடிக்கை :அதிகாரிக்கு பாராட்டு
சேலம் வீராணம் அருகேயுள்ள கோராத்துப்பட்டி ரோட்டிலுள்ள மரணகுழியானது பொக்லைன் மூலம் மூடப்பட்டது.
public demand serious action taken
சேலம் அயோத்தியாப்பட்டணம் யூனியனைச் சேர்ந்த கோராத்துப்பட்டி பஞ்சாயத்தில் , கோராத்துப்பட்டி காலனி செல்லும் மெயின் ரோட்டில் கேபிள் பணிக்காக தோண்டப்பட்ட ஒரு பெரும் பள்ளம் மூடப்படாமல் வெகுநாட்களாக டூவீலரில் செல்வோர், நடந்து செல்வோர் என பல தரப்பினரையும் அச்சுறுத்தி வந்தது. இதனால் பலர் கீழேவிழுந்து அடிக்கடி விபத்துக்குள்ளாகி காயமடைந்தனர். இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருந்தது. அதுவும்இரவு நேரத்தில் நடந்துசெல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோருக்கு ஆபத்தாகவே இருந்து வந்தது.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் இந்த பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரிடையாக நடவடிக்கை எடுத்து சீரமைக்க கோரிக்கை வைத்தனர்.இந்த கோரிக்கையின் அடிப்படையில் வட்டார வளர்ச்சி அதிகாரி உடனடியாக பொக்லைன் மூலம் அப்பகுதியில் உள்ள குழிகளை மூடி சீரமைத்தனர். சமூகஆர்வலர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைக்கு உடனடியாக செவிசாய்த்து மக்களுக்கு பாதுகாப்பு அளித்த அதிகாரிக்கு அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.
இதேபோல் சேலம் பொன்னம்மாப்பேட்டையிலிருந்து வாய்க்கால்பட்டறைக்கு செல்லும் வழியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி வரை ரோடானது குண்டும் குழியுமாகவே இருந்து வந்தது. இதனால் இவ்வழியே செல்லும் டூவீலர் ஓட்டிகள் மற்றும் வாகனங்கள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்த பிரச்னை குறித்து சமூக ஆர்வலர்கள் சென்னை முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு இந்த ரோட்டினைச் சீரமைக்க மனு அனுப்பினர்.
இந்த மனுவின் கோரிக்கை அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தற்போது புதிய தாக ரோடு போடப்பட்டு சீரமைக்கப்பட்டது.
மக்கள் பிரச்னைக்கு செவிசாய்த்து உடனடியாக நடவடிக்கை எடுத்த முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலருக்கு இப்பகுதி பொதுமக்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.இதுபோல் மக்கள் பிரச்னைகள் குறித்து கோரிக்கை விடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் தங்களுடைய நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu