பொதுமக்கள் வாங்க முடியாமல் தவிப்பு.... சேலம் மாவட்ட ரேஷன்கடைகளில் துவரம்பருப்பு, பாமாயில் சப்ளை இல்லை

தமிழக அரசின் சார்பில் செயல்பட்டு வரும் ரேஷன் கடை (கோப்பு படம்)
public demand regular supply,to ration shop
சேலம் மாவட்ட ரேஷன்கடைகளில் துவரம்பருப்பு, பாமாயில் போதிய அளவு சப்ளை செய்யாததால் 13 தேதியாகியும் இன்று வரை பொதுமக்களால் வாங்க முடியாமல் பாதிப்படைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்களை உடனடியாக சப்ளை செய்து பொதுமக்களின் குறைகளைப் போக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை சுமார் 1500 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. மாநகரில் மட்டும் சுமார் 500 க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு கடைகளுக்கும் தேவையான பொருட்களை குடோனில் இருந்து லாரிகள் மூலம் சப்ளை செய்யப்படுகிறது. இது மாதந்தோறும் நடக்கும் வழக்கமான நடைமுறை ஆகும்.
பொதுமக்களுக்கு மாதந்தோறும் இலவசஅரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம்பருப்பு , கோதுமை உள்ளிட்டபொருட்களை லாரிகளில்தான் கொண்டுவரப்பட்டு ரேஷன்கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. ஆனால் இந்த மே மாதத்தினைப் பொறுத்தவரை பல கடைகளில் போதிய பொருட்களை அதாவது துவரம்பருப்பு, பாமாயில் உள்ளிட்டவைகளை சப்ளை செய்யாததால் மே 13 ந்தேதியாகியும் இன்று வரை பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் திணறிவருகின்றனர்.
public demand regular supply,to ration shop
public demand regular supply,to ration shop
இதனால் தினந்தோறும் எப்போது கிடைக்கும்? என கடைக்கு வந்து கேட்டு செல்கின்றனர். ஒரு சிலர் கடைகக்கு எதிரே நீண்ட நேரம் அமர்ந்து விட்டு வெறும் கையுடன் செல்வதையே பார்க்க முடிகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கும் போது, ஆளும் அரசு அறிவித்தாலும் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் உரிய நேரத்தில் சப்ளை செய்யப்படாததால் நாம் அலைந்து திரியும் நிலையே உருவாகிறது. ரேஷன் கடைகளுக்கு மாதந்தோறும் அனுப்ப வேண்டிய பொருட்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் அனுப்பி வைத்தால் பொதுமக்களின் சிரமம் குறைய வாய்ப்புள்ளது. இவர்கள் உரிய நேரத்தில் பொருட்களை அனுப்பாததால் கடையில் பணியில் இருப்போருக்கும் பொதுமக்களுக்கும் ஒரு சில நேரத்தில் பலத்த வாக்குவாதங்களும் தொடர்கின்றன. இதனால் பணியாளர்களுக்கும் பெருத்த மன உளைச்சலை உருவாக்குகிறது.
public demand regular supply,to ration shop
public demand regular supply,to ration shop
மேலும் பொதுமக்களும் தினந்தோறும் அலைந்து திரிய வேண்டிய நிலையே உருவாகியுள்ளது. வயதானவர்கள் முதல் சிறுவர்கள் வரை தினந்தோறும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வந்துள்ளதா? என பார்த்துவிட்டுசெல்வது வழக்கமாகி வருகிறது. எனவே பொதுமக்களின் எதிர்பார்ப்பை நனவாக்கும் வகையில் எந்தவித இடையூறு இல்லாமல் மாதா மாதம் ரேஷன் கடைகளுக்கு உரிய நேரத்தில் பொருட்களை சப்ளை செய்யவேண்டும். இதற்கு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
public demand regular supply,to ration shop
public demand regular supply,to ration shop
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொருட்களை மாதந்தோறும் வழங்கப்படும் பொருட்களை கால தாமதமின்றி அனைத்துரேஷன்கடைகளுக்கும் சப்ளை செய்வதற்கான நடவடிக்கையினை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu