51 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

51 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் ஆசிரியர்  பயிற்சி பள்ளி மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
X

51 ஆண்டுகளுக்குமுன்  மேட்டூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயின்ற மாணவர்களின் சந்திப்பு கூட்டம் சேலத்தில் நடந்தது. 

mettur teacher training old student meet 1970 - 1972 ம் ஆண்டு வரை மேட்டூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு சேலம் தனியார் ஓட்டலில் நடந்தது.

mettur teacher training old student meet

உலகம் வெகு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை டென்ஷன்,,,, டென்ஷன்..டென்ஷன்....இதுதான் இப்போதைய வாழ்க்கை முறை. ஆனால் ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைவரும் பரபரப்பில்லாமல்தான் தங்களுடைய வாழ்க்கையினை வாழ்ந்தனர். நட்புகளோடு ஓய்வு நேரங்களில் கூடி பேசி மகிழ்ந்தனர். இளவயதினர் தங்களுக்கு ஒத்த வயதினரோடு தெருக்களில் விளையாடி மகிழ்ந்தனர். உடலும் உள்ளமும் நல்ல ஆரோக்கியத்துடன்தான்இருந்தது. காலப்போக்கில் தொழில்நுட்ப சாதனங்களின் வரவால் மனித உழைப்பு குறைந்தது....சேட்லைட் டிவிக்களின் ஆதிக்கம் துவங்கியது. பேச்சுகளும் குறைந்தது. யாருக்கும் யாரோடும் பேசவே நேரமில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு அபார்ட்மென்ட் வாழ்க்கைக்கு மாறத்துவங்கினர். இதிலிருந்து சற்று மாறுவதற்காக அக்காலத்தில் பள்ளி , கல்லுாரிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் ஆண்டுதோறும் ஒரு தேதியை நிர்ணயித்து சந்தித்து உரையாடி மகிழ்ந்து பின் பிரிந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இது இன்றளவில் பல மாவட்டஙகளில் தொடர்ந்து நடந்து வருவதை நாம் செய்திகள் வாயிலாக அறிந்து வருகிறோம். பல மாணவர்கள் பலருக்கும் உதவி செய்தும் வருகின்றனர். தாம் படித்த பள்ளி கல்லுாரிகளுக்கு நிதி வழங்குவதுண்டு. அதுபோல் கடந்த 1970-72 ம் ஆண்டில் படித்த ஆசிரியர் பயிற்சி மாணவர்களின் சந்திப்பு நெகிழ்ச்சியைத் தந்தது-.

51 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் 1970-72 ம் ஆண்டில் படித்த மாணவர்கள் சந்தித்து மகிழ்ந்தனர்.

இந்த சந்திப்பானது சேலம் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகிலுள்ள ஹோட்டல் கணேஷ் பவனில் கடந்த 5ந்தேதியன்று காலை 10மணிக்கு துவங்கியது. இதில் 50 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களுடைய குடும்பத்தினரோடு கலந்துகொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலோடு நிகழ்ச்சியானது இனிதே துவங்கியது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் மாணவர் கோபால் வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். லட்சுமணன் தலைமையில் இந்நிகழ்ச்சியானது நடந்தது. முன்னாள் குடியரசுத்தலைவர் உருவப்படத்தை திறந்து வைத்து வெங்கட்ரமணன் பேசினார்.

கடந்த கூட்டத்தின் வரவு செலவு அறிக்கையினை ஞானசேகரன் வாசித்தார். அதன் பின்னர் பல்வேறு தலைப்புகளில் அந்நாள் மாணவரும் ஆசிரியராக பணியாற்றியவர்கள் பேசினர். கர்மவீரர் காமராஜர் எனும் தலைப்பில் கார்த்திகேயனும், முதுமையில் இளமை என்ற தலைப்பில் மாதேசனும், வள்ளுவரின் வாய்மை என்ற தலைப்பில் அழகேசனும், எளிய முறை சிகிச்சை என்ற தலைப்பில் ராஜேந்திரனும் வெகு அழகாக எடுத்துரைத்து பேசியது பலருக்கும் பயனளிக்கும் விதமாக இருந்தது.

கடந்த 51 ஆண்டுகளுக்கு முன் மேட்டூர் அரசினர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்துவிட்டு பின் பலரும் பிரிந்து வெவ்வேறு இடங்களில் பலர் ஆசிரியர்களாக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்ற நிலையில் இந்த சந்திப்பில் மீண்டும் சந்தித்துக்கொண்டதால் பலரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

காலங்கள் உருண்டோடினாலும் வாழ்க்கை எனும் வட்டத்தில் ஒவ்வொருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையில் திசை மாறினாலும் பழைய நட்பினை அனைவரும் பகிர்ந்து கொண்டது பலருக்கும் மன நிறைவைத் தருவதாக இருந்தது. பலரும் தங்கள் குடும்பம், வாழ்க்கையைப் பற்றி ஒவ்வொருவருக்கும் பகிர்ந்துகொண்டதால் மனம் மகிழ்வையடைந்தனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. பீட்டர் பிரான்சிஸ் தசரா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்வின் இறுதியாக அரங்கநாதன் நன்றி தெரிவித்து பேசினார்.இறுதியில் நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே...எனும் பாடல் அனைவரின் காதில் ஒலித்தது போல் பிரிய மனமின்றி அனைவரும் பிரிந்துசென்றனர

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!