ஹூப்ளி -தஞ்சாவூர் வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் நீட்டிப்பு

பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க ஹூப்ளி (கர்நாடகா) – தஞ்சாவூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களின் சேவைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு:-
ரயில் எண்.07325 ஹூப்ளி – தஞ்சாவூர் வாராந்திர சிறப்பு ரயில், திங்கட்கிழமைகளில் ஹுப்ளியில் இருந்து புறப்பட்டு 26.06.2023 வரை தொடர்ந்து இயக்கப்படும். இந்த ரயில் ஹுப்ளியில் இருந்து திங்கட்கிழமைகளில் 20.25 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் 14.15 மணிக்கு தஞ்சாவூரை சென்றடையும்.
ரயில் எண்.07326 தஞ்சாவூர் – ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில், தஞ்சாவூரில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டு, 27.06.2023 வரை தொடர்ந்து இயக்கப்படும். இந்த ரயில் தஞ்சாவூரில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் 19.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.30 மணிக்கு ஹுப்ளியை சென்றடையும்.
சேலம் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களை இந்த ரயில் கடந்து செல்லும் நேரம் விவரம்:-
ரயில் எண்.07325 ஹூப்ளி- தஞ்சாவூர் ஜங்ஷன் வாராந்திர சிறப்பு ரயில்(செவ்வாய்க்கிழமைகளில்) சேலம் – 09.25/ 09.30 மணி, கரூர் 10.43/10.45 மணி.
ரயில் எண்.07326 தஞ்சாவூர் ஜங்ஷன்– ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (செவ்வாய்க்கிழமைகளில்) கரூர் – 22.25/ 22.27 மணி, சேலம் – 23.45/23.50 மணி.
இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu