ஆடிப் பதினெட்டாம் பெருக்கு :சேலம் கோயில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு

சோபகிருது தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் காய்கனிஅலங்காரத்தில் காட்சியளித்த சின்ன மாரியம்மன் (கோப்பு படம்)
adi 18 salem temples special pooja
ஆடிமாதம் பிறந்து விட்டாலே சேலம் மாநகரானது களை கட்ட ஆரம்பித்துவிடும். இங்குள்ள சேலம் கோட்டை மாரியம்மன், சின்னமாரியம்மன் ஆகிய கோயில்களில் ஆடிமாதத்தில் பண்டிகை வருடந்தோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் இதற்கானஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து வருகிறது.
சேலம் சின்னக்கடைவீதி சின்ன மாரியம்மன் கோயில் பூச்சாட்டுதல் (கோப்பு படம்)
வழக்கமாகவே ஆண்டுதோறும் ஆடிமாதத்தில் சேலம் மாநகரிலுள்ள அம்மன் கோயில்கள் அனைத்துமே களை கட்டிவிடும். ஆடி மாதத்தினை தெய்வீக மாதம் என்று கூட சொல்லலாம். அந்த வகையில் தினந்தோறும் அதிகாலை நேரத்தில் பெண்கள் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபடுவது காலம் காலமாக நடந்து வருகிறது.
ஆடிமாதம் 18 ந்தேதி கொண்டாடப்படுவதுதான் ஆடிப்பெருக்கு. இந்த நாளில் காவிரியில் பொங்கிப் பெருகி புதுவெள்ளம் வரும். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தை காவிரித்தாய் வாழ வைப்பதால் இதனை தெய்வமாக வழிபடுகின்றனர்.காவிரி பொங்கிப் பெருகிப் பாய்வதற்கு முதற் காரணம் விநாயகப்பெருமான்தான். எனவே காவிரி பூஜையில் அவருக்கு விருப்பமான காப்பரிசி, விளாங்கனி, நாவற்பழம் ஆகியவை கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் (கோப்பு படம்)
ஆடிப் பதினெட்டாம் பெருக்கையொட்டி காலையில் நீர்நிலையில் குளித்து நீர்நிலை கரையில் வழிபடுவர். புது மணத்தம்பதிகள் தங்களுடைய மாங்கல்யத்தை மஞ்சள் கயிறுடன் புதியதாக மாற்றிக்கொள்வர்.
சேலம் மாநகரைப்பொறுத்தவரை கோட்டை பெரிய மாரியம்மன், சின்னக்கடைவீதி சின்ன மாரியம்மன், அம்மாப்பேட்டை பல பட்டறை மாரியம்மன், தாதகாப்பட்டி காளியம்மன், அம்மாப்பேட்டை காளியம்மன், உள்ளிட்ட அம்மன் கோயில்களில் ஆடி 18 ம் பெருக்கையொட்டி நாளை சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆடி மாதத்தில் கோட்டை பெரியமாரியம்மன் மற்றும் சின்ன மாரியம்மன் கோயில்களில் ஆ டிப்பண்டிகைக்கான விசேஷ நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருவதால் இதோடு நாளை ஆடி 18ம் பெருக்கும் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை நீர்நிலை என்று சொல்லப்படுவது அருகிலுள்ள மேட்டூர் டேம் தான். இங்கு தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து பக்தர்கள் நீராட வருகை புரிவார்கள். அதேபோல் பவானி கூடுதுறைக்கும் வருவார்கள். இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆடிப்பூரத்தை யொட்டி சின்ன மாரியம்மன் வளையல் அலங்காரம் (கோப்பு படம்)
அருகிலுள்ள மாவட்டமான தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல்லுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. காவிரியில் புது வெள்ளம் பெருக்கெடுத்து வரும் எ ன்பதால் பக்தர்கள் யாரும் கரையோரம் குளிக்கக்கூடாது என தடை வி்திக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu