சேலம் ரவுடி கொலையில் மேலும் ஒருவர் கைது..

Salem Rowdy
X

Salem Rowdy

Salem Rowdy-சேலம் ரவுடி கொலை சம்பவத்தில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Salem Rowdy-சேலம் அன்னதானப்பட்டி அம்பாள் ஏரி ரோட்டை சேர்ந்த பிரபல ரவுடி ரஞ்சித்குமார் (வயது 29). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், சமீபத்தில் குண்டர் சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த வாரம் உடையாப்பட்டி வேடியப்பன் கோவில் பகுதியில் ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ரவுடி கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ரஞ்சித்குமாரை வீட்டில் இருந்து அழைத்து சென்ற தாதகாப்பட்டியை சேர்ந்த மகேந்திரன், சங்ககிரியை சேர்ந்த புகழேந்தி, பிரியாணி மணி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரஞ்சித்குமாரின் முதல் மனைவிக்கும், அவரது உறவினரான ஒரு இளைஞருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனைத் தெரிந்து கொண்ட ரவுடி, அந்த இளைஞரை கண்டித்ததால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ரவுடியை கொலை செய்ய இளைஞர் முடிவு செய்து தனது நண்பர்களை வைத்து கொலை செய்துள்ளார். தற்போது அந்த வாலிபரின் நண்பரான தாதகாப்பட்டியை சேர்ந்த மதன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த ரஞ்சித்குமாரின் மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு